உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்

புதுடில்லி:புதுடில்லி பிஜ்வாசனைச் சேர்ந்தவர் மனோஜ்,33. விமான நிலைய பணிகளுக்கு ஆள் சேர்க்கும் நிறுவன ஊழியர் எனக் கூறி ஏராளமானோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்தார். இவரிடம், 20,500 ரூபாய் ஏமாந்த புதுடில்லி ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஒருவர், போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் மஹிபால்பூர், ரங்புரி, பாலம் மற்றும் பிஜ்வாசன் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி, மனோஜை நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர். விமான நிலையத்தில் வேலை தேடுபவர்களை குறிவைத்து 20,000 முதல் 25,000 வரை வசூலித்து ஏமாற்றியதை மனோஜ் ஒப்புக் கொண்டார். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ