உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாடுகளுக்கு அணுசக்தி தகவல்களை விற்ற போலி விஞ்ஞானி மஹாராஷ்டிராவில் கைது

வெளிநாடுகளுக்கு அணுசக்தி தகவல்களை விற்ற போலி விஞ்ஞானி மஹாராஷ்டிராவில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : 'பார்க்' எனப்படும், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி எனக் கூறிக் கொண்டு, முக்கிய அணுசக்தி தகவல்களை வெளிநாடுகளிடம் பரிமாறி, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவரை, மும்பையில் போலீசார் கைது செய்தனர்.ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த அக்தர் ஹுசைனி, 60, என்பவர், மும்பையில் செயல்படும், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி எனக் கூறிக்கொண்டு, நாடு முழுதும் பயணம் செய்து சலுகைகளை அனுபவித்து வந்துள்ளார்.இதையறிந்த மும்பை போலீசார், அக்தர் ஹுசைனியை சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 10க்கும் மேற்பட்ட வரைபடங்கள், அணு ஆயுதங்கள் தொடர்பான தரவுகள் கைப்பற்றப்பட்டன. மேலும், போலி பாஸ்போர்ட்டுகள், ஆதார், பான், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின், இரு வேறு பெயர்கள் உடைய போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. டில்லியில் வசித்த அக்தர் ஹுசைனியின் சகோதரர் அடில் என்பவரும் கைது செய்யப்பட்டார்.இது குறித்து, மும்பை போலீசார் கூறியுள்ளதாவது: பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி என, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அக்தர் ஹுசைனி, 1995 முதல், வெளிநாடுகளிடம் இருந்து பணம் பெற்று வந்துள்ளார். முதலில் லட்சக்கணக்கில் பெற்ற அவர், 2000க்கு பின், கோடிக் கணக்கில் பணம் பெற்றுள்ளார். இதற்காக முக்கிய அணுசக்தி தகவல்களை அவர் கொடுத்துள்ளார். மேலும், அணுசக்தி நிலையங்கள் பற்றிய வரைபடங்களையும் அவர் அளித்துள்ளார். அக்தர் ஹுசைனி பெயரில் உள்ள ஒரு தனியார் வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது குறித்து விசாரணை நடக்கிறது. அக்தர் ஹுசைனி, அவரது சகோதரர் அடில் ஆகியோர் பாகிஸ்தானுக்கு சென்றிருக்கலாம் என்றும், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன், அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.கடந்த, 2004-ல், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயிலிருந்து, அக்தர் ஹுசைனி நாடு கடத்தப்பட்டதும், அதன்பின், போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு அவர் சென்று வந்ததும் தெரிய வந்துள்ளது. ஈரானுக்கு 20 முறையும், சவுதி அரேபியாவிற்கு 15 முறையும், ரஷ்யா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் அவர் சென்று வந்துள்ளார். இருவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. இதில் தொடர்புடையோர் விரைவில் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Sun
நவ 04, 2025 15:00

பாத்தாவே தெரிய வேணாம் இவன் விஞ்ஞானியான்னு! நம்பி கோடிக்கணக்குல பணத்தை கொடுத்த அந்த வெளி நாட்டுகாரர்களை நினைச்சா சிரிப்பு, சிரிப்பா வருது!


Modisha
நவ 04, 2025 11:00

தேச பற்று எல்லாம் அதுங்களுக்கு கிடையாது,.


அப்பாவி
நவ 04, 2025 05:47

என்னத்தச் சொல்ல?


Kasimani Baskaran
நவ 04, 2025 04:05

கள்ள பாஸ்போர்ட் செய்வது கடினம் என்றாலும் அதை பிடிப்பது மிக எளிது. பார்த்தவுடன் சொல்லலாம். ஆனாலும் சிக்கவில்லை என்பது ஆச்சரியம். இது போன்ற துரோகிகளை சுட்டுக்கொல்வதே சரியான தண்டனை.


நிக்கோல்தாம்சன்
நவ 04, 2025 03:26

இவனது சமூக வலைத்தளத்தை கண்ணைமூடிக்கொண்டு பாலோ பண்ணுபவர்கள் கூட


tamilvanan
நவ 04, 2025 02:46

இவர் போலி என்றால் அணு நிலையத்தில் வேலை செய்வதில்லை என்றாகிறது. அப்போது எப்படி அணு ரகசியங்களை விற்று இருக்கமுடியும். ஒருவேளை தவறான தகவல்களை விற்று இருப்பாரோ. அப்படி என்றால் ஏன் கைது? தவறான தவல்களை வெளியிட்டு நாட்டுக்கு நன்மை தானே செய்து இருக்கிறார்.


வாய்மையே வெல்லும்
நவ 04, 2025 01:13

கருப்பு ஆடு பாபா அனல் மின் நிலையத்தில் உள்ள வாய்ப்பு அதிகம். முதலில் அவுங்களை புடிங்க எசமான் ..


A viswanathan
நவ 04, 2025 00:33

பாஸ்போர்ட் போலியாக அந்த அளவிற்கு தயாரிக்க முடியும் என்றால் தவறு நம்முடையது தான். அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதில் கவனம் செலுத்தி வருங்காலத்தில் இதே போல் தயாரிக்க முடியாததை உறுதி செய்ய வேண்டும்.நாட்டின் பாதுகாப்பிற்கு வேண்டி.


Ramesh Sargam
நவ 04, 2025 00:06

இவன் மூஞ்சை பார்த்தாலே பிக்பாக்கெட் திருடன் மாதிரி இருக்கான். இவனுக்கு எப்படி அதிமுக்கியமான அணுசக்தி தகவல்கள் கிடைத்தது? இவனை தீவிர விசாரித்தால், மேலும் அதிகம் நபர்கள் சிக்குவார்கள். ஆகையால் தாமதமின்றி விசாரணையை தீவிரப்படுத்துங்கள்.


Varadarajan Nagarajan
நவ 03, 2025 23:48

நமது உளவுத்துறை இவ்வளவு மோசமாகவா செயல்படுகின்றது? கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு நமது அணு ஆயுத தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுத்தவனும் போலி அடையாள அட்டை மற்றும் பாஸ்ப்போர்ட்டுகளுடன் நடமாடியவனையும் நமது உளவுத்துறையால் கண்டுபிடிக்கமுடியவில்லையென்றால் நாம் நுண்ணறிவுத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளோம். அதை திருத்தியமைக்கவேண்டியது அவசியம் மற்றும் அவசரம்


SRINIVASAN R
நவ 04, 2025 20:42

இந்த நாய் பார்த்தால் ரயில்வே பிச்சைக்காரன் போலெ இருக்கான். எப்புடி ஏமாந்தீங்க. எப்புடி இந்த நாய்க்கு அட்டாமிக் படங்கள் கிடைத்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை