உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோமாவில் இருப்பதாக கூறிய டாக்டர்கள்; எழுந்து நடந்து சென்றார் வாலிபர்: ம.பி., மாநிலத்தில் அதிர்ச்சி

கோமாவில் இருப்பதாக கூறிய டாக்டர்கள்; எழுந்து நடந்து சென்றார் வாலிபர்: ம.பி., மாநிலத்தில் அதிர்ச்சி

போபால்; மத்தியப்பிரதேச மாநிலத்தில் கோமாவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நபர், தமது உடலுக்கு ஒன்றும் இல்லை என்று கூறி சாவகாசமாக எழுந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; மத்தியபிரதேசத்தில் ரத்லம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீனதயாள் நகரைச் சேர்ந்த பன்டி நினாமா என்ற வாலிபர் அனுமதிக்கப்பட்டார். சண்டையின் போது அவர் காயம் அடைந்துவிட்டதாக கூறி உறவினர்கள் இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அவரது முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசம் அடைந்துவிட்டதாகவும், கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். பின்னர், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சையும் அளித்து வந்துள்ளனர். ஆபத்தான கட்டத்தில் உள்ளதால், மருத்துவ சிகிச்சைக்கு நிறைய பணம் செலவாகும். உடனடியாக ரூ.1 லட்சத்தை மருத்துவமனையில் செலுத்திவிட வேண்டும் என்று அவரது உறவினர்களுக்கு மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் விரைவாக பணத்தை கட்டிவிட வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கே, இங்கே என்று கடன் வாங்கி, மருத்துவமனை கூறிய பணத்தை தயார் செய்து கொண்டிருக்கும் போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பன்டி நினாமா சாவகாசமாய் எழுந்து வெகு இயல்பாய் நடந்து வந்துள்ளார். உயிருக்கு போராடுகிறார் என்று மருத்துவர்கள் சொல்லிய நிலையில் மருத்துவமனை அறையில் இருந்து சாதாரணமாக அவர் நடந்து வெளியே வந்தது கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பன்டி நினாமா கூறியதாவது; ஐந்து மருத்துவமனை ஊழியர்கள் என்னை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக் கொண்டனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளேன். அவர்கள் எனது குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர் என்றார். மருத்துவமனையில் இந்த மோசடி பற்றிய விவரம் இணையதளத்தில் வெளியாக பலரும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

xavier antony
மார் 09, 2025 17:31

இது தமிழ்நாட்டிலும் நடைமுறையில் இருக்கவே செய்யலாம் சில கிருஸ்துவ மருத்துவமனைகளும் பணம் சம்பாதிக்க இதை கடைபிடிக்கலாம். மேலும் உடல் உறுப்புகளையும் தாணம் என்ற பெயரில் நல்ல நிலையில் இருப்போரிடம் இருந்து எடுத்து மல்டிஸ்பெஷலிட்டி மருத்துவமனையில் உள்ள வயதான வசதியான நபர்களுக்கு பெருந்தி கொடிகனக்கில் பணம் சம்பாதிக்கலாம். சாட்சி இல்லாததால் எளிமையாக தப்பித்து விடலாம். மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.


James Mani
மார் 15, 2025 23:26

சங்கி நெவெர் கிளேவ்ர்


V Gopalan
மார் 08, 2025 16:49

When the life of a patient was not in serious or coma stage, hospital authorities try to squeeze money. Why not the Dinamalar say the name of hospital what prevents to inform the name of hospital to general public. After all, common citizens are only suffering at the hands of Corporate Hospital to Govt Hospitals. Now, the consultation ges have crossed Rs.1000-00 besides immediately, recommend ECG, scan, Urine/Blood ultimately doctor will say everything normal but how about billing? Our country is now competing developed countries in ging the patients, even Aurvedic, Homeopathy et all are now costlier. Only thing is to digest the sufferings and wait for the dignified death.


Rajagopal S
மார் 08, 2025 14:30

இது போலீசுக்கு தேதிரியாதா ?


Rajagopal S
மார் 08, 2025 14:26

இது முதல் குற்றமாக இருக்காது .. போலீஸ் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.


Sivagiri
மார் 08, 2025 13:34

நல்ல காலம் - கோமா - மூளைச்சாவு என்று சொல்லி கிட்னி , ஈரல் , எல்லாம் வித்துட்டு , மிச்சத்தை பொட்டணம் போட்டு கொடுத்து இருப்பார்கள் , , இனிமேல் போலீஸ் ஸ்டேசனுக்கு வக்கீலோடு போவது போல , மல்டிஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு , குடும்ப டாக்டரை கையோடு கூட்டி செல்ல வேண்டும் போல , . . . மல்டிஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் சொல்வது உண்மையா என்று சரிபார்க்க . . .


Karthik
மார் 08, 2025 11:42

மருத்துவமனையின் பெயரை வெளியிடுங்கள் தினமலர்.. மற்றவர்களும் அங்கு சென்று மீண்டும் மீண்டும் ஏமாறாமல் இருக்கவும், அப்பாவி/ஏழை எளிய மக்களை காக்கவும் பெயரை வெளியிடுங்கள் ஊடகங்களே..


Anantharaman Srinivasan
மார் 08, 2025 11:36

ஆஸ்பத்திரிகளில் நடக்கும் இந்த மாதிரி மோசடிகளைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் விஜயகாந்த் "ரமணா" சினிமா மூலம் மக்களுக்கு அறிவுறுத்தினார்.


Mahen
மார் 08, 2025 10:50

கேடி யின் ஊர்ல எல்லாம் அப்படித்தானே


Kumar
மார் 08, 2025 10:45

மருத்துவ மனையின் பெயர் வெளியிடவும்.. மற்றவர்கள் அங்கு செல்லாமல் இருக்க.


ponssasi
மார் 08, 2025 10:00

கொரோனா காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் சிறிதளவும் மனசாட்சி இல்லாமல் கட்டணம் வசூலித்தன, ஆனால் அரசு சிறிதும் கவலைகொள்ளவில்லை ஏனனில் மருத்துவமனை நடத்துவதுவும் அவர்களே அந்த மருத்துவமனைக்கு மக்களை வரவைக்கும் நோய்களை பரப்புவதும் அவர்களே


சமீபத்திய செய்தி