உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் ஷாரூக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்! சத்தீஸ்கரில் மடக்கிய போலீஸ்

நடிகர் ஷாரூக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்! சத்தீஸ்கரில் மடக்கிய போலீஸ்

ராய்பூர்: பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை சத்தீஸ்கரில் போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையில் உள்ள பாந்த்ரா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசிய ஒருவர், பிரபல நடிகர் ஷாரூக்கானை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், அதை தடுக்க வேண்டுமானால் ரூ. 50 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தார்.பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தொலைபேசி அழைப்பை தொடர்ந்து, பாந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகர் சல்மான்கானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் விவகாரத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் ஷாரூக் கானுக்கு அதே போல் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, பாந்த்ரா போலீசார் துரிதமாக விசாரணையை தொடங்கினர்.எங்கிருந்து செல்போன் அழைப்பு வந்தது என்பதை சைபர் க்ரைம் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்தனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த வக்கீல் முகமது பைசான் கான் என்பவரின் செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பைசான் கானை விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்திருந்தனர். ஆனால் அவர் வராமல் மறுக்கவே, நேரடியாக ராய்பூருக்கே பாந்த்ரா போலீசார் சென்று முகமது பைசான் கானை கைது செய்தனர். அவரிடம் நடத்திய போது, தமது செல்போன் தொலைந்து விட்டதாகவும், இதுகுறித்து நவம்பர் 2ம் தேதி உள்ளூர் போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் கூறினார். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை