உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  28 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர் தேர்தல் கமிஷனால் வீடு திரும்பினார்

 28 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர் தேர்தல் கமிஷனால் வீடு திரும்பினார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேசத்தில், 28 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக கருதப்பட்ட நபர், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வாயிலாக, உயிரோடு இருப்பது தெரிய வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. இதன் வாயிலாக, 28 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக கருதப்பட்ட நபர், உயிரோடு வீடு திரும்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம், கடவுலி பகுதியைச் சேர்ந்தவர் அஹமது ஷெரீப், 79. இவர் முதல் மனைவி காலமானதைத் தொடர்ந்து, 1997ல் மறுமணம் செய்தார். தன் இரண்டாவது மனைவியுடன் மேற்கு வங்கம் சென்றார். உ.பி.,யில் இருந்த உறவினர்களுடன் அவ்வப்போது போனில் பேசி வந்த ஷெரீப்புடனான தொடர்புகள் படிப்படியாக துண்டிக்கப்பட்ட ன. மேற்கு வங்கத்தில் அவர் தங்கியிருந்த முகவரியை, தொடர்புகொள்ள முடியாததால், ஷெரீப் இறந்துவிட்டதாக உறவினர்கள் கருதினர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர்., பணிகளின் போது, ஷெரீப்பின் பழைய ஆவணங்கள் கேட்கப்பட்டன. அது தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்காக, கடவுலிக்கு இவர் சென்றார். ஷெரீப்பின் திடீர் வருகை, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஷெரீப் கூறுகையில், ''என் இரண்டாவது திருமணம் நடந்த நேரத்தில் குறைந்த அளவிலேயே தகவல் தொடர்பு வசதிகள் இருந்ததால், குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ''எஸ்.ஐ-.ஆர்., பணிக்காக ஆவணங்கள் தேவைப்பட்டதால், சொந்த ஊர் வந்தேன். குடும்ப உறுப்பினர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சின்னப்பா
ஜன 02, 2026 11:58

போன மச்சான், வயதாகித் திரும்பி வந்தார், இந்தியர் என்று நிரூபிக்க!


தியாகு
ஜன 02, 2026 10:50

 28 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர் தேர்தல் கமிஷனால் வீடு திரும்பினார். ஹி...ஹி...ஹி... இதெல்லாம் ஒரு பெருமையா. எங்க டுமிழ்நாட்டில் இறந்துவிட்ட சுமார் 30 லட்சம் பேர் தேர்தல்கள் நடக்கும் நாளில் மட்டும் உயிருடன் வந்து கட்டுமர திருட்டு திமுகவிற்கு ஓட்டு போட்டுவிட்டு செல்வார்கள். போவியா அங்கிட்டு.


Anand
ஜன 02, 2026 10:44

விடியல்/மமதை/ரவுல் வின்சி மற்றும் ஏனைய கூட்டுக்களவாணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?


S.V.Srinivasan
ஜன 02, 2026 09:37

SIR வாக்காளர் திருத்தத்தினால பி ஜே பிக்கு வேண்டாதவர்கள் பெயர்களை நீக்கும் நடவடிக்கையை பி ஜே பி எடுத்துள்ளது என்று கூவிய இந்தி கூட்டணி இப்போ என்ன சொல்வாங்க.


RAJ
ஜன 02, 2026 09:25

நல்ல விஷயம்.. ..இவர் இன்னும் தாய்நாட்டிற்கு செஞ்சுவிட வேண்டிய விஷயங்கள் இருக்கும்ல ....


N.Purushothaman
ஜன 02, 2026 07:23

சந்தோசம் ....இதிலிலிருந்து என்ன தெரியுது ? ... உறவினர்களாக இருந்தாலும் அவர்களிடம் கொஞ்ச நாள் பேசாமல் இருந்தால் உங்க ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்ன்னு வேண்டிக்கிட்டு அடுத்த காரியத்தை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க ....முடிஞ்ச வரைக்கும் தொடர்பில் இருங்க ...


Valagam Raghunathan
ஜன 02, 2026 06:32

இது என்ன பிரமாதம்.. நாங்க ஒரு ஒரு தேர்தலிலும், இறந்த ,லட்ச கணக்கான பேரை ஓட்டு போட, உயிர் கொடுத்து அழைத்து வருகிறோம்.


Chandhra Mouleeswaran MK
ஜன 02, 2026 09:52

அதானே அதானே நம்ம கச்சிக் கொளுகை நிலையில்லாத மனித வாழவில் நாங்கள் நிறையப் பேருக்குப் புனர் ஜென்மம் தருகிறோம் அதைப்பாருங்கள்


முக்கிய வீடியோ