உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொள்கை விஷயங்களை பேச அனுமதி இல்லை: கங்கனாவுக்கு கடிவாளம் போட்ட பா.ஜ.,

கொள்கை விஷயங்களை பேச அனுமதி இல்லை: கங்கனாவுக்கு கடிவாளம் போட்ட பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்தை கூறிய நடிகையும், மாண்டி தொகுதி பா.ஜ., எம்.பி.,யுமான கங்கனா ரணாவத், கட்சியின் கொள்கை விஷயங்கள் பற்றி பேச அனுமதியில்லை எனவும், அவர் இதுபோன்ற அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க உத்தரவிடுவதாகவும் பா.ஜ., தெரிவித்துள்ளது.டில்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக நடிகையும், பா.ஜ., எம்.பி.,யுமான கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ''மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் போது தூக்கிலிடுதலும், பாலியல் வன்கொடுமைகளும் நடந்தன. அப்போது மோடி அரசின் வலுவான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்தியாவில் வங்கதேசத்தில் நடந்தது போன்ற சூழலை உருவாக்கியிருப்பார்கள். அது சார்ந்த திட்டங்களை அவர்கள் கொண்டிருந்தனர்'' என பேசியிருந்தார். கங்கனாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் மட்டுமல்லாமல் பா.ஜ., கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பின. பஞ்சாப் பா.ஜ., மூத்த தலைவர் ஹர்ஜித் கரேவால், ''மாண்டி தொகுதி எம்.பி., கங்கனா ரணாவத், எரிச்சலூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். விவசாயிகளைப் பற்றிப் பேசுவது கங்கனாவின் துறை அல்ல, கங்கனாவின் அறிக்கை அவரின் தனிப்பட்ட கருத்து'' எனக் கூறியிருந்தார்.இந்த நிலையில், பா.ஜ., தரப்பில் வெளியான அறிக்கையில், ''பா.ஜ., கட்சியின் கொள்கை விஷயங்களை பற்றி பேசுவதற்கோ, அறிக்கை வெளியிடவோ கங்கனாவுக்கு அதிகாரமும் இல்லை, அவருக்கு அனுமதியும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கங்கனா ரணாவத்துக்கு உத்தரவிடப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

MADHAVAN
ஆக 28, 2024 11:29

இவளைப்பற்றி கேட்டல் தெரியும், இவள் எப்படிப்பட்டவ என்று


MADHAVAN
ஆக 27, 2024 11:44

இவளுக்கு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களை காலனியால் அடிக்கணும்,


Dr Govind Thurai
ஆக 26, 2024 22:34

சினிமா வசனத்திற்கு தரும் மரியாதையாவது நடிகை பொது சமாச்சாரத்திற்கு தர வேண்டும்


venugopal s
ஆக 26, 2024 22:02

பாஜகவில் இவர் மட்டும் தான் அப்படி பேசுகிறாரா?


Easwar Kamal
ஆக 26, 2024 21:07

ரெட்டை குழல் துப்பாக்கி என்ன சொல்லுறாங்களோ அதுக்கு கட்டுப்பட்டு நடக்கணும் அம்மணி புஞ்சதா? சும்மா வாய்க்கு வந்த மாதிரி பேசிகிட்டு இருந்தேனா அப்புறம் அடி இடி மாதிரி வில்லும்.


பாமரன்
ஆக 26, 2024 20:04

அதானே... இல்லாததையும் பொல்லாத தையும் பேசலாமா... அதாவது நம்ம கம்பெனி கொள்கை / கொள்ளைகள் பற்றி சொன்னேன்...


M Ramachandran
ஆக 26, 2024 19:28

சரி தான். இதை கட்சி மேடை பேச்சாளர்கள் மாற்றம் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். இல்லையேல் தலைமைக்கு ஒரு அதிக படியான பிரச்சனய்ய யாக ஆகும்.


Indian
ஆக 26, 2024 18:35

பெண் இனத்துக்கே கேடு , இந்த அம்மையார்


தமிழ்வேள்
ஆக 26, 2024 19:28

அதாவது, ஆயிஷா, ஃபாத்திமா, கதீஜா, ஜைனபா மாதிரி... ன்னு நேரடியாக சொல்லு பாய்


ஆரூர் ரங்
ஆக 26, 2024 17:40

உண்மையைத்தான் பேசினார் என நினைக்கிறேன். ஆனால் ஹரியானா மாநில தேர்தலில் பிரச்னைகளை உருவாக்கும் எந்தப் பேச்சும் சரியல்லை.


புதிய வீடியோ