உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசார், அரசு ஊழியர் பயன்பாட்டிற்காக மங்கல் சதன் கட்டடம் திறந்து வைப்பு

போலீசார், அரசு ஊழியர் பயன்பாட்டிற்காக மங்கல் சதன் கட்டடம் திறந்து வைப்பு

புதுடில்லி:டில்லியின் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, புதுப்பிக்கப்பட்ட பல பயன்பாடு கூடத்தை, மாளவியா நகர் போலீஸ் காலனியில் திறந்து வைத்தார்.மோசமான முறையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து நிலையில் இருந்த சமூகநலக் கூடத்தை இடித்து விட்டு, அந்த இடத்தில், 300 - 350 பேர் அமரும் விதத்தில், 'மங்கல் சதன்' என்ற கட்டடம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.இந்த வளாகத்தில் கார் பார்க்கிங் வசதி உள்ளது. 94 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தின் மொத்த கட்டுமானம், 31,650 சதுரடி.இந்த இடத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை, போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் நடத்திக் கொள்ள முடியும். இதற்காக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.ஏற்கனவே இதுபோன்ற வளாகத்தை, 'உத்சவ் சதன்' என்ற பெயரில், கிங்ஸ்வே கேம்ப் பகுதியில் உள்ள நியூபோலீஸ் கேம்ப் பகுதியில் துவக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை நிலை ஆளுநர் சக்சேனா, போலீஸ் வீட்டு வசதி வாரியத்தின் பணிகளை பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை