‛‛ பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் மன்மோகன்சிங் பிரதமர் மோடி பாராட்டு
புதுடில்லி: ‛‛ பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், என என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.மன்மோகன் சிங் உள்ளிட்ட ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனைமுன்னிட்டு ராஜ்யசபாவில் நடந்த பிரவு உபசார விழா உரையில் , பிரதமர் மோடி பேசியதாவது: மன்மோகன் சிங் பணிகளை இன்று நினைவு கூற விரும்புகிறேன். அவரது பங்களிப்பு அளப்பரியது. நீண்ட காலம், இந்த அவையையும், நாட்டையும் அவர் வழிநடத்திய விதம் மறக்க முடியாது. அவர் நம்மை தொடர்ந்து வழிநடத்த பிரார்த்தனை செய்கிறேன். ஜனநாயகத்தை வலுப்படுத்தியவர் அவர். பார்லியில் நடந்த ஓட்டெடுப்பு ஒன்றில், ஆட்சியாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிந்தும், மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து தனது ஓட்டை பதிவு செய்தார். ஒரு உறுப்பினர் தனது கடமையை எப்போதும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். தனது கடமைகளை சிறப்புற நிறைவேற்றியவர். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.