உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொன்மையான மொழி தமிழ் என்பதில் இந்தியர் அனைவருக்கும் பெருமை: பிரதமர் மோடி

தொன்மையான மொழி தமிழ் என்பதில் இந்தியர் அனைவருக்கும் பெருமை: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்பதில், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை' என பிரதமர் மோடி பேசினார். 117வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது. 2025ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அன்று, நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி, 75 ஆண்டுகள் நிறைவு அடைகிறது. நாட்டு மக்களை இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மரபுடன் இணைக்க ஏதுவாக, http://Constitution75.comஎன்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தை பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் குழந்தைகள் பார்க்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியருக்கு பெருமை

உலகிலேயே தொன்மையான மொழி தமிழ். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. உலக நாடுகளில் தமிழ் மொழியை கற்று கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் பிஜியில் இந்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில், இதுவே முதல் முறை. ஜனவரி 13ம் தேதி முதல் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி ஒற்றுமையை வலியுறுத்துகிறது.

கலாசாரம்

தென் அமெரிக்காவில் பராகுவே என்றொரு நாடு உள்ளது. அங்கு வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்காது. பராகுவேயில் ஒரு அற்புதமான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பராகுவேயில் உள்ள இந்திய தூதரகத்தில், ஆயுர்வேத ஆலோசனை வழங்கப்படுகிறது.ஆயுர்வேத அடிப்படையிலான ஆலோசனைகளைப் பெற ஏராளமான உள்ளூர் மக்கள் ஆவலுடன் வருகின்றனர். இந்திய கலாசாரம் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி வருகிறது. சில வாரங்களுக்கு முன், எகிப்தில் இருந்து, 23,000 மாணவர்கள் இந்திய கலாசாரம் தொடர்பான ஓவியப் போட்டியில் கலந்து கொண்டனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

பாலா
டிச 29, 2024 21:50

திருட்டுத் திராவிடியன்களின் உடன் பிறந்த ஆரிய நண்பன். தமிழ்நாட்டில் ஓடும் தொடர் ஊர்ந்துகளின் பெயர்களைப் பார்த்தால் லட்சணம் தெரியும்.


J.Isaac
டிச 29, 2024 21:21

ஆனால் ஹிந்தி மொழியை இந்திய அலுவலக மொழியாக மாற்ற நடவடிக்கை எடுப்பார்கள்.


தமிழ்வேள்
டிச 29, 2024 20:07

மொழியாசிரியர் தான் பள்ளிகளில் பிள்ளைகளின் ஒழுக்கத்துக்கு முதல் பொறுப்பு... ஆனால் தமிழகத்தில் நாஸ்திக திராவிடத்தை இவர்கள் ஆதரித்ததால் ஒழுக்கக்கேட்டை ஒப்புக்கொள்ளும் சமரசத்துக்கு வந்து விட்டார்கள்.. இவர்களின் வரம்பற்ற சினிமா வெறியும் இன்னொரு காரணம்


kulandai kannan
டிச 29, 2024 19:39

திராவிட ஆட்சிகளில் தமிழைப் பேச்சு மொழியாக மட்டுமே மாற்றி விட்டார்கள். இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் அரிதாகி விடுவார்கள்.


என்றும் இந்தியன்
டிச 29, 2024 17:19

தொன்மையான மொழி தமிழ் அதாவது திருக்குறள் தெரிந்தவர்களுக்கு.ஆனால் இப்போ இருக்கும் தமிழ் தமிழே அல்ல என்ன மச்சி அங்கே இட்டாந்து போறியா தேமேன்னு ஜமாய்ச்சிக்கின்னு. நான் பகரும் வார்த்தை லிகிதம் என்னும் இத்தரணியில், இன்று நான் சொல்றது இந்த worldle


Kasimani Baskaran
டிச 29, 2024 17:06

திராவிடர்களுக்கே தமிழ் உரிமையான மொழி என்ற ஒரு மாயையை உடைத்து தமிழின் தொன்மையை உலகளவில் எடுத்துச்சென்றது மோடியின் பெரும் முயற்சியில் என்றால் அது மிகையாகாது.


venugopal s
டிச 29, 2024 16:48

தொன்மையான மொழி தமிழ் என்றும் சொல்வார், ஆனால் தமிழகத்தில் ஹிந்தியைத் திணித்து தமிழை அழிக்கவும் செய்வார்! இரட்டை வேடம் நன்றாகவே போடுவார்!


Dharmavaan
டிச 29, 2024 18:40

எப்படி அழிந்துவிடும் உளறாதே .ஹிந்தி பேசும் மற்ற மாநிலங்களில் அந்த மாநில மொழி அழிந்து விட்டதா உனக்கு தமிழ் எந்த அளவுக்கு தெரியும் 1330 குறள் தெரியுமா.தமிழ் ஒழுங்காக பேச தெரியுமா ஆங்கிலம் பேசியதால் தமிழ் அழிந்து விட்டதா?


Kasimani Baskaran
டிச 29, 2024 19:50

ஹிந்தியை திராவிட மதத்தினர் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் திணிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் ஹிந்தி படிக்கக்கூடாது என்று கேவல அரசியல் செய்கிறார்கள். இது இரட்டை வேடம் மட்டுமல்ல கபட வேடம். பகுத்தறிவை பயன்படுத்தி அதையும் கொஞ்சம் கேட்கலாமே.


J.Isaac
டிச 29, 2024 21:19

உண்மை, உண்மை, உண்மை


CBE CTZN
டிச 29, 2024 16:37

பாரத பிரதமருக்கு நன்றி. இதன் தொன்மை முழுவதும் தெரிய வேண்டும் எனில், குமரி கண்டம் பற்றிய கடல் அகழாய்வு மிக முக்கியம். அதற்கு இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அனுமதி அளிக்க ஆவணம் செய்ய வேண்டும்... அப்பொழுதுதான் இங்கு நடக்கும் இந்த திராவிட கூத்து முடிவுக்கு வரும்..


Svs Yaadum oore
டிச 29, 2024 15:29

தமிழுக்கும் தமிழனுக்கும் நீங்கள் என்ன செய்தீங்க என்று கேள்வி ..... நெற்றிக்கண் திறப்பினும் குற்றமாம் ....பெரிய நக்கீரர் என்று நினைப்பு ....மோடி அய்யா நிர்வாகத்தில் குஜராத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் ......குஜராத் மணி நகர் தொகுதி மினி தமிழ் நாடு ....மோடி அய்யா முன்பு குஜராத் சட்ட சபை தேர்தலில் எப்போதும் வெல்வது மணி நகர் தொகுதிதான் ....இங்கு மத அடிப்படையில் மோடி அய்யா மீது வெறுப்பு பிரச்சாரம் செய்து விடியல் திராவிடனுங்க அவதூறு பிரச்சாரம் ....


ராமகிருஷ்ணன்
டிச 29, 2024 15:04

காங்கிரஸ் பிரதமர்கள் யாராவது தமிழ் மொழியை இந்த அளவுக்கு புகழ்ந்தது உண்டா, ஒரு பொருட்டாக கூட மதித்தது இல்லையே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை