உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்ட் தாக்குதல்; சத்தீஸ்கரில் 9 பேர் வீரமரணம்!

பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்ட் தாக்குதல்; சத்தீஸ்கரில் 9 பேர் வீரமரணம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில் படைவீரர்கள் உட்பட 9 பேர் வீர மரணம் அடைந்தனர்.முதற்கட்ட தகவலின்படி, சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியான குத்ருவில் வரும்போது ஐ.இ.டி., குண்டுவெடிப்பு மூலம் நக்சல்களால் பாதுகாப்பு படையினர் வாகனம் தகர்க்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1fkjxwi3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பலியானவர்கள் எட்டு பேர் தண்டேவாடா டிஆர்ஜி ஜவான்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் உள்பட 9 பேர் என தெரியவந்துள்ளது. தண்டேவாடா, நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் கூட்டு நடவடிக்கை ரோந்து சென்றுவிட்டு வரும் போது இந்தசம்பவம் நடந்துள்ளது. பஸ்தார் மண்டல ஐஜி சுந்தர்ராஜ் கூறியதாவது:குத்ரு பெத்ரே சாலையில் வெடிகுண்டு பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் போலீஸ் வாகனத்தை வெடிக்கச் செய்தனர். இந்த ஆண்டின் முதல் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை சனிக்கிழமையன்று அபுஜ்மத் நகரில் நடத்திவிட்டுத் திரும்பும் போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.ஜனவரி 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்நடவடிக்கை தொடங்கியது. தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளை தேடும்பணி முழுவீச்சில் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜன 07, 2025 08:43

இனிமேலும் 2026 ல் ஒழிப்போம். 2047 ல் ஒழிப்போம்னு கதை உடாம மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கப் பாருங்க.


Sudha
ஜன 06, 2025 20:03

இந்நேரம் அக்காவும் அண்ணாவும் அங்க போய் இருப்பார்கள். தகவல்களை பொறுக்கிக்கொண்டு வந்திருப்பார்கள்


Sudha
ஜன 06, 2025 20:01

இங்கெல்லாம் ட்ரொன் வேலை செய்யாத? என்ன அடிப்படையில் வீரர்கள் அனுப்ப படுகிறார்கள்? ஒரு ஆளில்லா வேன் ஒரு ட்ரான் போதும். உளவு சொல்லப்படுகிறதா என சோதிப்பது அவசியம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 06, 2025 18:45

அவர்கள் வேட்டையாடப்பட்டால் மூர்க்கத்தனமாக பதிலடி கொடுக்கிறார்கள் ..... பாதுகாப்புப் படைகளை எண்ணிக்கை கூட்டி, குழுக்களாக அனுப்பி வேட்டையாடவேண்டும் .....


Kasimani Baskaran
ஜன 06, 2025 16:23

தயவு தாட்சண்யம் பார்க்காமல் தீவிரவாதம் செய்யும் கம்மிகளை துடைத்து ஒழிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை