உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் 14 பேர் சுட்டுக்கொலை; வீரர்களுக்கு உதவித்தொகை ரூ.25 ஆயிரமாக உயர்வு

ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் 14 பேர் சுட்டுக்கொலை; வீரர்களுக்கு உதவித்தொகை ரூ.25 ஆயிரமாக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் குலாரிகாட் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மாவோயிஸ்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துணிச்சலான வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகையை, ரூ.8,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஒடிசா மாநிலம் குலாரிகாட் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அப்பகுதியில் பலர் பதுங்கி உள்ளனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசா மாநிலம் நுவாபாடா மாவட்ட எல்லையான குலாரிகாட் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் மாவோயிஸ்டுகள் 14 பேர் கொல்லப்பட்டனர்.துணிச்சலான வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகையை ரூ.8,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஒடிசாவில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இந்த கூட்டு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை