உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியை நோக்கி பேரணி: விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு

டில்லியை நோக்கி பேரணி: விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹரியானா மாநிலம் ஷம்பு எல்லையில் இருந்து டில்லியை நோக்கி தடையை மீறி பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் இரண்டு விவசாயிகள் காயமடைந்தனர்.வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டபூர்வ உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் மின்சார கட்டண உயர்வில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டில்லியை நோக்கி பேரணியை துவக்கினர். இவர்கள் டிராக்டர்களில் பஞ்சாப் - ஹரியானா இடையே அமைந்திருக்கும் ஷம்பு எல்லையில் வியாழக்கிழமை குவிந்தனர். அங்கிருந்து டில்லிக்கு கிளம்பினர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனையும் மீறி விவசாயிகள் டில்லியை நோக்கி செல்ல முயன்றதைத் தொடர்ந்து, அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் இரண்டு விவசாயிகள் காயமடைந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qixbqfsd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விவசாயிகள் போராட்டம் தொடர்பாக விவசாயத்துறை இணை அமைச்சர் பகிரத் சவுத்ரி கூறியதாவது: பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விவசாயிகளுக்கு கதவுகள் திறந்தே உள்ளன. நானும் அவர்களது சகோதரன் தான். அவர்கள் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் சரி, நாங்கள் அங்கு சென்று பேச வேண்டும் என விரும்பினாலும் சரி அதனை செய்வோம் என்றார்.விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பார்லிமென்டில் கூறியதாவது: விவசாயிகளின் விளைபொருட்கள் அனைத்தும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் என உறுதி அளிக்கிறேன். இது தான் மோடி அரசின் முடிவு. அதனை நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

J.V. Iyer
டிச 07, 2024 05:09

போனதடவைதான் விவசாயி என்ற போர்வையில் இந்த காலிஸ்தானி பயங்கரவாதிகளால் டெல்லி பலமாதங்கள் ஸ்தம்பித்தது.. இதில் இருந்து பாஜக அரசு கற்றுக்கொண்ட பாடம் என்ன? இவர்களை மீண்டும் டெல்லியை நோக்கி வரும் முன்னே தடுத்திருக்கவேண்டாமா? இந்த பாஜக அரசும் செயலற்றதாகி விட்டதா? கடுமையாக நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம்? மக்கள் உங்கள் பின்னால் என்று தெரிந்தும் இவர்களை அடக்க துப்பு இல்லை?


நிக்கோல்தாம்சன்
டிச 07, 2024 04:29

தேர்தலில் நின்று தோற்ற பிறகு மீண்டும் இந்த போராட்டம் என்று கையில் எடுத்திருக்கும் அந்த சிங்கு பெரிய ஆள்தான் , அவனை பற்றி சொல்வதற்கும் ஒரு ஆண்மைத்தனம் வேண்டும் ,என்ன செய்வது தமிழக ஊடகத்துறை அந்த .. இல்லாமல் தவிக்கிறதே


தாமரை மலர்கிறது
டிச 07, 2024 00:40

இந்தியா அமைதியாக இருந்தால் காங்கிரஸ் காரர்களுக்கு பிடிக்காது. விவசாயிகளை தூண்டிவிட்டு, நடுவே தீவிரவாதிகளை புகுத்திவிடுவார்கள். மத்திய அரசு போராட்டத்தின் நடுவே புகுந்துள்ள தீவிரவாதிகளை காஷ்மீரில் கவனிப்பதை போன்று கவனிக்க வேண்டும். ஒரே வாரத்தில் இரும்புக்கரம் கொண்டு, இவர்களை அடக்குவது அமைதியை மீட்டெடுக்கும்.


Ramesh Sargam
டிச 06, 2024 22:52

பருவ மழை நிகழ்வுபோல, வருடம் ஒருமுறை இப்படி விவசாயிகள் பேரணி நிகழ்வு. அதில் பங்கேட்பவர்கள் எல்லாம் போலி விவசாயிகள்.


sankaranarayanan
டிச 06, 2024 21:21

இவர்களது போராட்டம் பிசுபிசுதுவிடும் ஒவ்வொருமுறையும் இத்தாலி குடும்பத்தால் அரசியல் ஆதாயமடைய தூண்டப்பட்ட கும்பல் இது. இனி இவர்களுக்கு மக்களது ஆதரவே கிடைக்காது. இவர்களுக்கு தில் இருந்தால் தில்லியில் மத்திய அமைச்சர் கூப்பிடும்போது பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக தீர்த்து முடித்துக்கொள்ளலாம் அதை விட்டுவிட்டு மக்களுக்கு இடையூறு செய்வதென்றே தீர்மானித்து செய்யப்படும் போராட்டம் இது இவர்களுக்கு மக்களது ஆதரவு முற்றிலும் கிடைக்கவே கிடைக்காது பிசு பிசுத்துபோய்டும்


Visu
டிச 06, 2024 21:20

ஜார்ஜ் சோரஸ் மற்றும் கான்கிரஸ்காங்கிரஸ் இல்லை கைக்கூலிகள்


Rajan
டிச 06, 2024 20:53

இவர்கள் விவசாயிகளே இல்லை. இடைத்தரகர்கள் ஆட்கள். பாராளுமன்றம் கூடும் போது பிரச்சினை செய்ய தூண்டப்பட்டவர்கள். இதை முதலில் ஒழிக்க வேண்டும்


Abhivadaye
டிச 06, 2024 20:28

விவசாயி, நெசவாளி, தொழிலாளி, பாட்டாளி , மனித உரிமை போராளி அதே ஆளு இப்படி பல வேஷம் போடுவார்.


வைகுண்டேஸ்வரன்
டிச 06, 2024 19:49

யார் சார் இவங்கல்லாம்? அப்பப்போ போரடிச்சா ட்ராக்டரை எடுத்துக்கிட்டு கிளம்பிடறாங்க???


Raj
டிச 06, 2024 18:14

ஏற்கனவே ஜஸ்டின் டுரோடே கூறிவிட்டான்.


புதிய வீடியோ