உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடிகார கணவர்கள் கொடுமை: திருமணம் முடித்த தோழியர்

குடிகார கணவர்கள் கொடுமை: திருமணம் முடித்த தோழியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோரக்பூர்: உத்தர பிரதேசத்தில், குடிகார கணவர்களால் தினமும் சித்ரவதையை அனுபவித்த தோழியர் இருவரும் திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உ.பி.,யில் உள்ள கோரக்பூரைச் சேர்ந்தவர் கவிதா. சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்த இவருக்கு, ஆறு ஆண்டுகளுக்கு முன், 'இன்ஸ்டா' வாயிலாக குஞ்ஜா என்ற பெண் அறிமுகமானார். சம வயதுடைய இருவரும், மொபைல் போன் வாயிலாகவும் பேசி வந்தனர்.அப்போது, குடிகாரரான தன் கணவர் நாள்தோறும் அடித்து சித்ரவதை செய்வது குறித்து தோழி குஞ்ஜாவுடன் கவிதா பகிர்ந்து கொண்டார். அவரும், இதேநிலையை அனுபவிப்பதாக கூறி, தன் கஷ்டங்களை கவிதாவிடம் கூறி புலம்பினார். இருவரும், குடிகார கணவர்களால் தங்களுக்கு ஏற்படும் அவலங்களை அடிக்கடி பகிர்ந்த சூழலில், நாம் ஏன் குடிகார கணவர்களுடன் வாழ வேண்டும் என விவாதிக்க துவங்கினர்.கணவரை பிரிந்தபின் என்ன செய்வது என்பது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர். முடிவில், கணவர்களை பிரிந்து திருமணம் செய்துகொள்ள கவிதா மற்றும் குஞ்ஜா முடிவு செய்தனர். உடனடியாக இதற்கான வேலைகளை துவங்கிய அவர்கள், வீட்டைவிட்டு வெளியேறி, தியோரியா நகரில் உள்ள சோட்டா காசி எனப்படும் சிவன் கோவிலில், மாலை மாற்றி நேற்று திருமணம் செய்து கொண்டனர். இதில், மணமகனாக மாறிய குஞ்ஜா, கவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியாக்கி கொண்டார்.இது குறித்து குஞ்ஜா கூறுகையில், “குடிகார கணவர்களால் சொல்ல முடியாத சித்ரவதையை அனுபவித்தோம். எனவே தான் அன்பு மற்றும் அமைதிக்காக புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்துஉள்ளோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தத்வமசி
ஜன 26, 2025 12:01

ஏன் ஒருவர் ஆண் போலவும், மற்றொருவர் பெண் போலவும் நடந்து கொள்ள வேண்டும் ? இதிலும் ஒன்னும் பெரிய மாற்றம் இல்லையே ? அடுத்து ஆணாக இருப்பவர் பெண்ணை அடிப்பாரா ? சித்திரவதை செய்வாரா ? திருமணம் தான் தீர்வா ? நண்பிகளாக இருக்கலாமே. சரி எப்படி குடித்தனம் .....? கலிகாலம். திருமணத்தின் பொருள் அறியாதவர்கள்.


Kasimani Baskaran
ஜன 26, 2025 08:10

திராவிட அடிமை ஊடகங்கள் தமிழகத்தில் 38000 கோடி செலவு செய்து குடிப்போர் உலகுக்கே வழிகாட்டி என்று உருட்டுவார்கள். ஆட்சியில் இல்லை என்றால் தமிழகம்தான் குடிகாரர்களால் விதவையான பெண்களின் சொர்க்கம் என்று சொல்வார்கள். உடன்பிறப்புக்கள் காரணமில்லாமல் கதறுவார்கள்.


அப்பாவி
ஜன 26, 2025 06:18

உ.பி மாநிலம் முன்னோடியா இருக்குது. அங்கே குடிகாரன்களை கண்டிக்க ஆட்டுக்குட்டி சாட்டையோடு போவாரா?


shyamnats
ஜன 26, 2025 08:18

தமிழ் நாட்டுல நடக்கிற அவலங்களை கண்டிக்க அப்பாவி முன் வர மாட்டார். ஒவ்வொரு குடிகாரர்கள் வீட்டிலும் குடிகாரர்களின் மனைவியர் கண்டிக்க ஆரம்பித்தாலே கணவர்களை திருத்தலாம். இந்த ஒழுங்கீனத்திற்கு, மது விற்பனையை, எதிர்த்து மக்கள் தேர்தல்களில் வாக்களித்தாலும் மாற்றம் வர முடியும். சும்மா வெளி நாடுகளில், மாநிலங்களில் மது ஒழிப்பு செய்தால்தான் இங்கு தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடுவோம் என்று சொல்பவர்கள் வாயை அடைக்கலாம்.


N Sasikumar Yadhav
ஜன 26, 2025 09:28

அப்பாவிக்கு தூரப்பார்வை போலீருக்கிறது உத்தரபிரதேசம் மட்டும்தான் தெரியும் இங்கே தமிழகத்தில் தாயின் சடலத்தை இருபது கிலோமீட்டர் சைக்கிளில் வைத்து கட்டிக்கிட்டு சென்றதை பார்க்க பார்வை தெரியாது


Bye Pass
ஜன 26, 2025 02:44

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திக்கலாமா ?


சம்பா
ஜன 26, 2025 01:53

காரணம் வேறு


தியாகு
ஜன 26, 2025 11:13

டுமிழ்நாட்டில் கட்டுமர திருட்டு திமுகவினர் செய்யும் கேவலமான செயலுக்கு இவர்களின் செயல் எவ்வளவோ தேவலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை