உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., நிலம், ரொக்கம் முடக்கம்!: பண மோசடி வழக்கில் அமலாக்க துறை அதிரடி

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., நிலம், ரொக்கம் முடக்கம்!: பண மோசடி வழக்கில் அமலாக்க துறை அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி:கேரளாவில், கருவண்ணுார் சேவை கூட்டுறவு வங்கி ஊழலில் தொடர்புடைய பண மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அம்மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு சொந்தமான நிலம் மற்றும் 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வங்கி டிபாசிட்களை அமலாக்கத் துறையினர் முடக்கி உள்ளனர்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திருச்சூர் மாவட்டத்திலிருக்கும் குன்னங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஏ.சி.மொய்தீன், 67. ஆளுங்கட்சியைச் சேர்ந்த இவர், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.கடந்த 2010ல், திருச்சூரை தலைமையிடமாக வைத்து, கருவண்ணுார் சேவை கூட்டுறவு வங்கி செயல்பட்டது.

குற்றச்சாட்டு

அப்போது, ஏழை மக்களின் சொத்துகளை, அவர்களுக்கு தெரியாமல் அடமானம் வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கடன் வழங்கப்பட்டதாகவும், இதன்படி, 100 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இந்த கடன்கள் அனைத்தும் மொய்தீன் அறிவுறுத்தலின்படி வழங்கப்பட்டதும் தெரிய வந்தது. இது குறித்து, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்த அமலாக்கத் துறை, மொய்தீனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் சோதனை நடத்தியது.இந்த வழக்கில், அமலாக்கத் துறையினர் இதுவரை நான்கு பேரை கைது செய்துள்ள நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில், சிறப்பு நீதிமன்றத்தில், 55 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.இந்நிலையில், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு சொந்தமான, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் அக்கட்சியின் ஐந்து வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த, 63 லட்சம் ரூபாயை அமலாக்கத் துறையினர் நேற்று முடக்கினர். இந்த நிலம், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் அலுவலகத்துக்கானது என்றும், கருவண்ணுார் சேவை கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற பயனாளிகளிடமிருந்து கைமாறாக வாங்கியது என்றும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடவடிக்கை

இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் எம்.வி.கோவிந்தன் நேற்று கூறியதாவது:அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களை, பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டுவதற்கு அமலாக்கத் துறை முயற்சிக்கிறது. கருவண்ணுார் சேவை கூட்டுறவு வங்கி வழக்கில், அமலாக்கத் துறையின் நடவடிக்கையை எதிர்த்து, அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடுவோம். இது தொடர்பாக எங்களுக்கு முறைப்படி எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அமலாக்கத் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் என்ன செய்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அரசியல் அழுத்தத்தின் கீழ், பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத் துறையினர் செயல்படுகின்றனர். இது நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தமிழ்வேள்
ஜூன் 30, 2024 10:38

இந்த மாதிரியான நில பண்டமாற்று ஊழலை லாலு குடும்ப சகிதம் செய்தார்... அதேபோல் அதே வேலையை இங்கு ஒரு கட்சி செய்கிறது....


ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 09:26

ஜுஜுபி 63 லட்சம்? ஓ. மீதி தேர்தலில் செலவாகி விட்டதோ? எளிமையான கம்யூனிஸ்ட் தலைவர்களை பார்க்க முடியவில்லை. தினமும் எங்க பகுதியில் நடைபயிற்சி செல்லும் மூத்த கம்யூனிஸ்டு தலைவர் அணியும் டீ சர்ட் முதல் ஷூ வரை மேற்கத்திய இறக்குமதி அயிட்டம்தான்.


duruvasar
ஜூன் 30, 2024 09:17

இவர் ஒரு மகா யோக்கியன் என்பதை அவர் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறது


vadivelu
ஜூன் 30, 2024 07:51

என்ன ஒரு வசதி பாருங்க, திருடவேண்டியது, மக்கள் நம்புவார்கள் என்று பழி வாங்குராங்க என்று ஒப்பாரி வைப்பது.


Neethan K
ஜூன் 30, 2024 07:21

தவறு நடந்ததா இல்லையா என்று விளக்கம் தராமல்.. வெறுமனே இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வதால் என்ன பயன்? ஏற்கனவே கழுதை தெரிந்து கட்டெறுமான கதை தான் இந்த கம்யூனிஸ்டுகள். நாடு முழுவதும் இருந்தவர்கள் என்று.. நாட்டின் தென்கோடி முனைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு ஒரே ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார்கள். இதுதான் இந்த கம்யூனிஸ்ட்கட்சி மற்றும் ஆட்சியின் லட்சணம்.


Kasimani Baskaran
ஜூன் 30, 2024 07:12

நம்பிக்கையான காங்கிரஸ் இருக்கும் பொழுது சீனா இவர்களை நம்ப வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. அதன் அடிப்படையில் சீன உதவி கிடையாது. மோடி வேறு வெளிநாட்டு பணம் வரும் பாதைகளை முழுவதுமாக அடைத்து விட்டார். இனி ஒரே வழி உள்ளூரில் கள்ளத்தனம் செய்வதுதான். அது அவ்வளவு எளிதல்ல. தமிழகம் போல தீம்க்காவிடம் பிச்சை எடுத்து கட்சியை அடகு வைக்க மனமில்லை. ஒரே வழி அழிந்து போவதுதான். மட்டற்ற மகிழ்ச்சி.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 30, 2024 09:25

Well said.


கண்ணன்
ஜூன் 30, 2024 06:43

கம்யூக்களுக்கும் நமது திராவிடீயர்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை


மோகனசுந்தரம்
ஜூன் 30, 2024 05:57

என்ன சார் அநியாயமாக இருக்கிறது. இங்கு பத்து லட்சம் கோடி 67 லட்சம் கோடி என்று ஊழல் செய்துவிட்டு மஜாவாக வாழ்கிறார்கள். இங்கு எந்தவித நடவடிக்கையும் காணுமே. எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.


sankaranarayanan
ஜூன் 30, 2024 05:46

உடனே சம்பத்தப்பட்ட அமைச்சர் தார்மீக முறையில் தானாகவே பதவி விலக விழா வேண்டுமே


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி