உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உங்க ஆட்சி இருந்தப்போ ஏன் அதை செய்யலை: ராகுலை கேட்கிறார் மாயாவதி

உங்க ஆட்சி இருந்தப்போ ஏன் அதை செய்யலை: ராகுலை கேட்கிறார் மாயாவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை' என ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பி உள்ளார்.'நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நிச்சயம் நடத்துவோம். இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம்' என ராகுல் திட்டவட்டமாக கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து, சமூக வலைதளத்தில் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கை:

முக்கியம்

மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு முன், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை. இப்போது அதைப் பற்றிப் பேசுகிறார்களே, பதில் சொல்லுங்கள்? அதேசமயம் பகுஜன் சமாஜ் கட்சி எப்போதுமே அதற்கு ஆதரவாகவே இருந்து வருகிறது. எங்களுக்கு நலிவடைந்த பிரிவினரின் நலன் முக்கியம். பட்டியலின மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் மவுனம் காக்கின்றனர்.

எச்சரிக்கை

காங்கிரஸ் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது. இடஒதுக்கீடு தொடர்பான அவர்களின் அறிக்கைகளில் இருந்து அவர்கள் நிலை என்ன என்பது தெளிவாக தெரிகிறது. அவர்களின் மவுனம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான சிந்தனையை தான் காட்டுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

RIfay
ஆக 25, 2024 19:09

அக்கா மாயாவதி அவர்கள் பாஜக பெயரிலேயே செயல்படலாம்


Sakthi,sivagangai
ஆக 25, 2024 19:28

அறிவாலய அடிமைகளுக்கு ஐந்தறிவுதான் என்பதை நிரூபிக்கும் பதிவு


GoK
ஆக 25, 2024 18:54

சாதிக்கணப்புக்கு அப்புறம் என்ன செய்ய யோசனை? எவ்வளவு மக்கள் தொகையோ அவ்வளவு அதிகாரம் அரசு பதவிகளில், பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமா அரசியல் கட்சிகளிலும் வருமா? இவனுடைய கட்சியில் இவன், இவன் அம்மா மற்றும் தங்கை ஆட்சி ஏன் அந்த கட்சியில் சாதிவாரியாக பதவிகளில் அமர்த்தப்படவில்லை? எவர் காதில் இவர் பூ சுத்தப்பார்க்கிறார்


பேசும் தமிழன்
ஆக 25, 2024 17:20

அப்படி கேளுங்கள் அம்மா.... இப்படியெல்லாம் கேள்வி கேட்டால்.... இளவரசருக்கு பிடிக்காது.... அவருக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்.... பதில் சொல்ல தெரியாது.....50 ஆண்டுகள் கான் கிராஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது மறந்து போன தலித் மக்கள்... இப்போது தான் இவருக்கு நியாபகம் வருது போல் தெரிகிறது ??? எல்லாம் நாடகம் என்று மக்களுக்கு தெரியும்..... உங்களை நம்ப நாட்டு மக்கள் யாரும் தயாராக இல்லை !!!


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2024 16:28

இப்படியெல்லாம் கேள்வி கேட்டதினால் தான் தமிழகத்தில் INDI கூட்டணியினரால் உங்களது கட்சி தலைவர் கொல்லப்பட்டார் அப்போ அழுக்கு டைரக்டர் முதல் மொள்ளமாரி இயக்குனர் வரை சும்மா இருந்தாங்க


M Ramachandran
ஆக 25, 2024 15:56

ராகுல் ஒரு பயந்தான்கொள்ளி பேர்வழி. அதனால் ராகுல் எதை கூறினாலும் ஜே ஜே என்று சொல்லி கை தூக்கி விடுகிறார்கள்.


RAJ
ஆக 25, 2024 14:36

இருங்க மேடம் .. அண்ணண் போட்டோ புடிச்சுகிட்டு இருக்கார். அடுத்தமுறை தூக்கிகாட்டுவார்.


ஆரூர் ரங்
ஆக 25, 2024 14:28

மாயாம்மா. நேரு இந்திரா ராஜிவ் ஆட்சியிலிருந்த போது இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தனர். இந்திரா ராஜிவ் இருவரும் மண்டல் அறிக்கையை ஓரங்கட்டி வைத்தனர். இப்போ ஆட்சியில் இல்லாத மனகுறையால் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிப் பேசுவது உங்களுக்குத் தெரியாதா? கன்சிராமும் நீங்களும் தலித் சமுதாயத்தையே விதவிதமாய் ஏமாற்றும் வரலாற்றை உலகறியும்.


ganapathy
ஆக 25, 2024 14:17

பலே சபாஷ் சரியான கேள்வி..


Duruvesan
ஆக 25, 2024 13:57

அப்போ இல்ல எப்பவுமே பண்ண மாட்டோம், நாடு நாசமா போனாலும் போட்டும் எல்லோருக்கும் எல்லாம் பிரீ னு சொல்லுவோம் ஆனால் குடுக்க மாட்டோம், கர்நாடக ல கணக்கேடுப்பு முடிஞ்சது ஆனால் வெளி இட மாட்டோம், தெலுங்கானா ஹிமாச்சல் ல பீலா உடுவோம் பண்ண மாட்டோம். ஜனங்க இளிச்சவாய் பசங்க எத சொன்னாலும் நம்பி ஓட்டு போடுவானுங்க, நீ போம்மா அங்கிட்டு


Iyer
ஆக 25, 2024 13:55

மாயாவதியை ஜனாதிபதி ஆக்க பிஜேபி தீர்மானித்துள்ளது. இனி பிஜேபி யும் - பி எஸ் பி யும் - உபி ல் கூட்டணி வைத்து தேர்தலில் நிற்பார்கள்


புதிய வீடியோ