உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை

அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை

புதுடில்லி: 24 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பிரபல சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கருக்கு கோர்ட் 5 மாதம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.கடந்த 2000ம் ஆண்டு மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக துவங்கப்பட்ட அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது.இது தொடர்பாக அப்போதைய மக்களுரிமைக்கான தேசிய கவுன்சில் தலைவராக வி.கே. சக்சேனா இருந்தார். இது தொடர்பாக சக்சேனா, என்.ஜ.ஓ. அமைப்பைச் சேர்ந்தவர் மேதாபட்கர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர். மேதா பட்கர் உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.டில்லி சாகேத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு 24 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில், மேதா பட்கர் குற்றவாளி என மே மாதம் கோர்ட் அறிவித்தது.அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. இதில் மேதா பட்கருக்கு 5 மாத சிறை தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ராகவ் சர்மா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஜூலை 02, 2024 10:52

அப்பீலை வெல்ல பொன்முடியிடம் ஆலோசனை கேட்கவும். அப்புறம் மந்திரி பதவி கொடுக்க கூட அழுத்தம் வரும். என்ஜாய்.


N Sasikumar Yadhav
ஜூலை 02, 2024 06:58

இதுபோன்ற தேசத்திற்கு எதிராக இருக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் என்ற பெயரிலிருக்கும் நகர்ப்புற நக்சலைட்டுகளை கண்டறிந்து தூக்குதண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் . திறனற்ற திமுக அரசால் முடியாது


Indhuindian
ஜூலை 02, 2024 05:58

Trial at the Metropolitan Court - 24 years. Further appeals at the High Court and Supreme Court? When will the acquittal or sentencing be completed? Status of judiciary


Ambika. K
ஜூலை 02, 2024 05:51

கிழிஞ்சுது. அந்த பொம்பளை இந்த 24 வருஷத்துல 5 மாசத்துக்கு மேல கோர்ட் பெஞ்ச்ல உட்கார்ந்து இருந்து இருக்கும்.


Kasimani Baskaran
ஜூலை 02, 2024 05:10

மேல், கீழ், பக்க, வடக்கு தெற்கு முறையீடு செய்து அதன் பின் தண்டனை வந்தாலும் வயது குறுக்காக நிற்கும்...


தாமரை மலர்கிறது
ஜூலை 02, 2024 04:00

மெத்த பாடகருக்கு ஐம்பது வருடம் சிறை தண்டனை கொடுத்திருக்க வேண்டும். இவரை போல் தீவிரவாதி தூண்டிவிடும் அருந்ததி ராய்க்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும்.


sankaranarayanan
ஜூலை 02, 2024 02:01

24 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பிரபல சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கருக்கு கோர்ட் 5 மாதம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. என்று கேட்கவே வேதனையாகவும் வியப்பாகவும் உள்ளது நீதி அளிப்பதற்கும்ஒரு காலவரை அவசியம் - அதை இந்த பாராளுமன்றத்திலேயே அமலாக்க வேண்டும் இதைவிட கேலிக்கூத்தாக வேறு ஒன்றுமே ஜனநாயக நாட்டில் இருக்கவே முடியாது இதற்கு ஒரு வரம்புமுறை வைக்கவேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை