உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய படையில் மருத்துவ அதிகாரியாகும் வாய்ப்பு: டாக்டர்கள் 345 பேருக்கு வாய்ப்பு

மத்திய படையில் மருத்துவ அதிகாரியாகும் வாய்ப்பு: டாக்டர்கள் 345 பேருக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையில், காலியாக உள்ள 345 மருத்துவ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14.சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவ அதிகாரி, சிறப்பு மருத்துவ அதிகாரி மற்றும் உதவி மருத்துவ அதிகாரி ஆகிய காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க வேண்டும். துணை மருத்துவ அதிகாரி பணியிடங்களில் 10% முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கியமான தேதி

விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14.

விண்ணப்பிப்பது எப்படி?

https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ரூ. 400. ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த ஆண்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
அக் 05, 2024 18:42

முன்பெல்லாம் சீருடை அணியும் வேலைவாய்ப்புக்கு என்று உடல் தகுதியில் ஒரு உயரம் வைத்திருந்தார்கள், அவர்களைப்பார்த்தாலே நமக்கு ஒரு அச்சம் ஏற்படும், சிலரைப்பார்த்தால் வீரமும் வரும் ஆனால் இப்போது பள்ளி மாணவர்களைப்போல் இருப்பவர்கள் உயரத்தில் கூறுகிறேன், பணியில் சேருவது வருத்தம் அளிக்கிறது . திருநெல்வேலி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் வாழும் நமது வீரத் தமிழர்களை சந்தித்தால் புரியும் , ஒரு பதவிக்கு எப்படிப்பட்ட உடற்கட்டு இருக்கவேண்டும் என்று அறியலாம், வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை