உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சப்பாத்தி சுடும் குரங்கு மசாலா அரைக்கும், பாத்திரமும் கழுவும்: அசத்துகிறது ஆல் இன் ஆல் அழகு ராணி!

சப்பாத்தி சுடும் குரங்கு மசாலா அரைக்கும், பாத்திரமும் கழுவும்: அசத்துகிறது ஆல் இன் ஆல் அழகு ராணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில், குரங்கு ஒன்று சப்பாத்திக்கு மாவு உருட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலிக்கு அருகில் உள்ள காகிபூர் சத்வா என்ற சிறிய கிராமத்தில் ராணி என்ற குரங்கு வாழ்ந்து வருகிறது. குரங்காகப் பிறந்தாலும், மனிதனைப் போன்ற பழக்க வழக்கங்களாலும், உதவி செய்யும் குணத்தாலும் ஒட்டுமொத்த கிராமத்தினர் மனதில் இடம் பிடித்துள்ளது. இந்த குரங்கு, 8 வருடங்களாக, அசோக் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mvfhi62v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குடும்ப உறுப்பினர்களைப் போலவே வீட்டு வேலைகளைச் செய்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக குரங்கு மாறி உள்ளது. இந்த குரங்கு வீட்டு வேலை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பாத்திரங்களைக் கழுவுதல், சப்பாத்திக்கு மாவு உருட்டி தேய்ப்பது, சுடுவது, மசாலா அரைப்பது போன்ற பணிகளை செய்கிறது. சமைக்கும் போதெல்லாம், ஆர்வத்துடன் உதவி செய்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அன்றாட வீட்டு வேலைகளை செய்யும் குரங்குகளை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rpalni
ஜன 02, 2025 13:31

ஏ ஐ க்கு பதில் குரங்கா?


kantharvan
ஜன 02, 2025 10:01

எலோன் மாஸ்க் வீட்டு வேலை செய்யும் ரோபோவை அறிமுகப் படுத்தி புத்தாண்டிற்கு தொழில் நுட்பத்தில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார் ஆனால் இங்கே குரங்குகள் தேவையே இல்லாமல் திமுக, ....கள் என்று அறிவே இல்லாமல் கமெண்டுகளை அள்ளி விட்டு கதறிக்கொண்டு இருக்கிறார்கள் இதற்கு அந்த தூதன் எவ்வளவோ பரவாயில்லை? இந்த மொள்ளமாரிகளால் நாடு முன்னேற முடியாமல் தவிக்கிறது. இதுக்கு அது வீட்டு வேளையாவது ஒழுங்கா செய்யுது இதை பார்த்தால் எலோன் மஸ்க்குக்கே மயக்கம் வந்துடும்.


Ramesh Sargam
ஜன 01, 2025 20:20

இதை பார்த்துவிட்டு, ஒரு சில கணவன்மார்கள், தங்களது பெண்டாட்டிகளிடம், உன்னை கட்டியதுக்கு பதிலாக, இந்த குரங்கை கட்டியிருக்கலாம் என்று நொந்து கொள்ளலாம்...


Barakat Ali
ஜன 01, 2025 19:35

தமிழ்நாட்டு துமு வை விட விஷயம் தெரிந்த குரங்குதான் ...


Kundalakesi
ஜன 01, 2025 17:41

பெரியார் பெண்கள் இதை கவனிக்கவும்


venugopal s
ஜன 01, 2025 17:41

என்னவோ தெரியவில்லை இதைப் படித்தவுடன் நமது மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் போடுவது ஞாபகம் வருகிறது!


N Sasikumar Yadhav
ஜன 01, 2025 20:50

இந்த குரங்கை பார்த்தவுடன் எனக்கு உங்க ஞாபகம்தான் வந்தது திரு கோபாலபுர கொத்தடிமை அவர்களே


என்றும் இந்தியன்
ஜன 01, 2025 16:56

பாவம் போன ஜென்மத்தில் ஒரு புருஷனுக்கு / மனைவிக்கு விட்டுப்போன காரியங்களை இந்த ஜென்மத்தில் கழிக்கின்றது போலும் இந்த குரங்கு


MARI KUMAR
ஜன 01, 2025 15:44

குரங்கு வேற லெவலுங்க


சம்பா
ஜன 01, 2025 15:34

உடனே வருவான் வனத்துரையில இருந்து பாருங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை