உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சென்னையில் கூட்டம்: கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு

சென்னையில் கூட்டம்: கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு

பெங்களூரு: லோக்சபா தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, மார்ச் 22ல் சென்னையில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு தமிழக அமைச்சர் பொன்முடி தலைமையிலான குழு அழைப்பு விடுத்தது.லோக்சபா தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு குறைவு உள்ளிட்ட விவகாரங்களை தேசிய அளவில் எடுத்து செல்வதற்கு, தென் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை இணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்து, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, தென் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக, பிற மாநில முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு அழைக்க, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இதன்படி, அமைச்சர் பொன்முடி தலைமையிலான குழுவினர், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து சென்னையில் தமிழக அரசு சார்பில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அழைப்பு கடிதத்தை வழங்கினர்.அதேபோல், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த அமைச்சர்கள் குழுவினர் சென்னையில் நடக்கும் கூட்டத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Arul
மார் 13, 2025 22:46

எந்த மொழியில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது? கன்னட, தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், ஒரிய, ஹிந்தி, அல்லது தமிழில


Ramesh Sargam
மார் 12, 2025 19:59

தனியாக மோதினால் பருப்பு வேகாது என்று, கூட்டத்தை சேர்க்கின்றனர் திமுகவினர்.


Veluvenkatesh
மார் 12, 2025 19:39

அறிவிக்கப்படாத ஒரு கொள்கைக்கு எப்படியெல்லாம் ஓடி ஓடி அரசியல் செய்கிறார்கள் பாருங்க? காவேரில ஒரு சொட்டு தண்ணீர் விட முடியாதுனு கர்நாடகா சொன்னபோது யாருமே வாயை திறக்கவில்லை, டெல்டா விவசாயிகள் கண்ணீர் வடித்தபோது எங்கு போனது இந்த சுறுசுறுப்பு? இப்போது ஏன் இந்த நாடக கோஷ்டி இப்படி பதறுகிறது. ஆக, இவர்கள் பெரும் சிக்கலில் மாட்டி உள்ளார்கள் என்பது உண்மை. நாளைக்கு ED கேஸ், அரெஸ்ட் என்று வந்தால்-இதையெல்லாம் காட்டி பாசாங்கு செய்யலாமே?


தமிழன்
மார் 12, 2025 19:35

இதில் காட்டும் வேகத்தை காவிரி நீரை பெறுவதிலும் காட்டினால் பரவாயில்லை ஆனால் இங்கே ஆளுகிறவர் திருட்டை மட்டுமே தொழிலாக வைத்து ஆண்டு கொண்டிருக்கிறார்.பின்பு எப்படி தண்ணீர் கிடைக்கும். கானல் நீர் கூட கிடைக்காது


எவர்கிங்
மார் 12, 2025 14:09

முட்டாப் பயலுக சங்கமம்.... இது போன்ற தொகுதி மறு வரையரை திட்டம் எதுவுமில்லை என்று நன்கு தெரிந்த பின்னரும் கலந்து கொள்பவர்கள் கேனை கிறுக்கன்களே


முக்கிய வீடியோ