உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பங்காரப்பா வசித்த வீடு சிவகுமாரின் நினைவுகள்

பங்காரப்பா வசித்த வீடு சிவகுமாரின் நினைவுகள்

ஷிவமொகா: ''நான் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் சீடன். அவர் வசித்த வீட்டையே பெற்றுக்கொண்டேன்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:நான் குடியேற உள்ள அரசு பங்களாவை தேர்வு செய்ததற்கு, முன்னாள் முதல்வர் பங்காரப்பாவே காரணம்.நான் அவரது சீடன். அவர் வசித்த வீட்டிலேயே வசிக்க வேண்டும் என்ற ஆசையால், அந்த வீட்டை பெற்றுக்கொண்டேன்.பெங்களூரின், குமாரகிருபாவில் உள்ள அரசு பங்களாவில், முதல்வர் சித்தராமையா வசித்தார். அவர் வசிக்கிறார் என்ற காரணத்தால், அந்த பங்களாவை பெறவில்லை.பங்காரப்பா காங்கிரஸ் தலைவராக இருந்தவர். முதல்வர், வருவாய் உட்பட பல்வேறு துறை அமைச்சராக பதவி வகித்தவர். குமாரகிருபாவில் உள்ள அரசு பங்களாவில், அவர் வசித்தார். நான் அவரை சந்திக்க செல்லும் போது, அவருக்காக, அங்குள்ள மாமரத்தின் கீழே காத்திருப்பேன். அதை நினைவுகூரும் வகையில், அதே வீட்டில் குடியேற உள்ளேன். அந்த வீட்டில் பூஜை செய்துள்ளேன்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை