உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எமர்ஜென்சி கால நினைவுகள் என்றும் மறையாது: அமித்ஷா

எமர்ஜென்சி கால நினைவுகள் என்றும் மறையாது: அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' எமர்ஜென்சியின் போன்ற நிகழ்வுகளின் நினைவுகள் சமூகத்தில் இருந்து மறைந்துவிட்டால், அது நாட்டிற்கு தீங்கை விளைவிக்கும் '' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் 50 வது ஆண்டு தினத்தை நாம் நினைவு கூர்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இப்போது ஏன் விவாதிக்க வேண்டும் என கேள்விகள் எழலாம். 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நடந்த நிகழ்வு ஒன்றின் முடிவு நல்லது அல்லது கெட்டதாக இருந்தாலும், அதன் நினைவுகள் சமூகத்தில் இருந்து மாறாது. ஜனநாயகத்தை உலுக்கிய எமர்ஜென்சி போன்ற நிகழ்வுகளின் நினைவுகள் சமூகத்தில் இருந்து மறைந்துவிட்டால், அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்.சர்வாதிகாரத்தை ஒருவராலும் பொறுத்து கொள்ள முடியாத காரணத்தினால் எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடிந்தது. இந்தியா என்பது ஜனநாயகத்தின் தாய். எமர்ஜென்சியை யாரும் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதில், சர்வாதிகாரிகள் மற்றும் அதனால் பலனடைந்த சிறு குழுக்கள் மட்டுமே ஆதரித்தன. இதனை யாரும் எதிர்க்கவில்லை என்று நினைத்தார்கள். ஆனால், எமர்ஜென்சிக்கு பிறகு நடந்த லோக்சபா தேர்தலில், நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சி இல்லாத ஆட்சி அமைந்து மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார்எமர்ஜென்சியை ஒரு வார்த்தையில் விவரிக்க முடியாது. இதற்கான எனது விளக்கமானது,' ஒரு ஜனநாயக நாட்டில், பல கட்சி ஜனநாயகத்தை சர்வாதிகாரத்திற்கான சதித்திட்டம் ' என்பதாகும்.நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது, எனக்கு 11 வயது தான் இருந்தது . இதன் தாக்கம், குஜராத்தில், ஜனதா கட்சி ஆட்சி காரணமாக, குறைவாக இருந்தது. அந்த ஆட்சி கவிழ்ந்த பிறகு, நிலைமை மாறியது. எனது கிராமத்தில் மட்டும் 184 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த நாட்களை எனது வாழ்நாளில் மறக்க மாட்டேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Manaimaran
ஜூன் 25, 2025 18:04

நாடு அப்ப நல்ல நிர்வாகத் துல இருந்தது இப்ப உ.சு.வா


venugopal s
ஜூன் 25, 2025 11:10

எங்களுக்கும் அப்படித்தான், கடந்த பத்தாண்டு கால கொடுங்கோல் ஆட்சியை மறக்கவே முடியாது!


அப்பாவி
ஜூன் 25, 2025 09:44

நல்லா ஞகம் இருக்கு. டிரெய்ன் எல்லாம் டயத்துக் ஓடிச்சு. ஆபீசுக்கு எல்லோரும் நேரத்துக்கு வந்து நல்லா வேலை பாத்தாங்க.


Venukoppaal,S
ஜூன் 25, 2025 08:56

அதை அமல்படுத்திய கட்சியின் இளவல் வெட்கமே இல்லாமல் அரசியல் அமைப்பு புத்தகத்தை சும்மா பிலிம் காட்ட கையில வைத்து கொண்டு இருப்பான். அவனுக்கு மற்ற கூஜா தூக்கிகள் ஜால்ரா அடிப்பார்.


R.RAMACHANDRAN
ஜூன் 25, 2025 08:42

இந்த நாட்டில் மக்களாட்சி என்ற பெயரில் அதிகார வர்கம் கொடுங்கோன்மையான ஆட்சியை நடத்துகின்றது.மக்கள் பிரதிநிதிகள் அவர்கள் காட்சிகளை வளர்ப்பதிலும் பல தலைமுறைகளுக்கு தேவையான சொத்துக்களை குவிப்பதிலும் ஈடுபடுகின்றனர். மக்கள் ஆட்சி நடப்பதாக பொய்யுரை செய்கின்றனர்.


sambaivelan
ஜூன் 25, 2025 07:30

எமர்ஜென்சியில் அடைந்த எத்தனையோ நல்ல பலன்களையும் நினைக்க வேண்டும். நல்லதை நினைக்க நல்ல மனம் வேண்டுமே


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 25, 2025 07:26

சர்வாதிகாரத்தை எதிர்த்த சிங்க தமிழன் என்றோம். நெருக்கடி நிலையை எதிர்த்து இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தது கழகம் என்று போஸ்டர் அடித்தோம் ... பிறகு நாங்களே நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக.. ...என்று எமெர்ஜென்சி காலநினைவுகளை மறைத்து விட்டோம் ..அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை ..நிரந்தர எதிரிகளும் இல்லை என்று புது புரளியை கிளம்பிவிட்டோம் ..எமெர்ஜென்சியை வைத்து நாங்கள் செய்யாத அக்கப்போர் உண்டா .. ..கண்னதாசனின் வனவாசம் படியுங்கள் அமித்ஷா...எங்களை பற்றி உங்களுக்கு புரியும் ..


Mani . V
ஜூன் 25, 2025 04:56

அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒருவர் பெண்கள் பிரச்சினைக்ககாக உள்ளே போய் கடைவாய் உடைப்பட்டதை மிசா கால போராளி என்று உருட்டிக் கொண்டு திரிகிறார்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 25, 2025 07:44

இந்திய வரலாற்றில் திமுகவினரை ஓட ஓட காங்கிரஸ் அடித்த காலம் ..எமெர்ஜென்சி காலம் .. போலீஸ் வெளுத்த வெளுப்பில் ..திமுகவினர் கரைவேட்டிகள் காணாமல் போயின ... சிறையில் கொடுத்த மரண அடியில் கழக சட்ட திருத்த குழு செயலாளர் சிட்டி பாபு செத்தே போனார் ... கூட்டணி மந்திரி பதவியில் எமெர்ஜென்சி கொடுமை மறந்து போனது ..


Kasimani Baskaran
ஜூன் 25, 2025 03:55

காங்கிரஸ் அதை மறக்கடிக்க அரும்பாடு படுகிறது.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 25, 2025 07:51

போலீசை பார்த்து கழகத்தினர் உயிருக்கு பயந்து ஓடிய ஓட்டம் ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் கூட ஓடுத்தியதில்லை ..அப்படி ஒரு ஓட்டம் அது ..