உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.112 கோடி மெத் மாத்திரைகள் மியான்மர் எல்லையில் பறிமுதல்

ரூ.112 கோடி மெத் மாத்திரைகள் மியான்மர் எல்லையில் பறிமுதல்

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தையொட்டிய மியான்மர் எல்லையில், 112 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்ஆம்பெட்டமைன் மாத்திரைகளை அசாம் ரைபிள்ஸ் படையினர் பறிமுதல் செய்தனர்.வடகிழக்கு மாநிலமான மிசோரமின் சம்பாய் மாவட்டத்தையொட்டிய பகுதியில், நம் அண்டை நாடான மியான்மர் எல்லை உள்ளது. இந்த பகுதியில் உள்ள சோகாவ்தார் கிராமம் அருகே, அசாம் ரைபிள்ஸ் படையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருவர் தோளில் பைகளை சுமந்தபடி சென்றனர். அசாம் ரைபிள்ஸ் படையினர் அவர்களை வழிமறித்து சோதனையிட்டனர்.அப்போது அந்த பைகளில், 3.33 லட்சம் மெத்ஆம்பெட்டமைன் போதை பொருள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு, 112.40 கோடி ரூபாய். கடத்தலில் ஈடுபட்ட இருவர், பைகளை விட்டுவிட்டு, அருகே பாயும் டையு ஆற்றில் நீந்தி மியான்மருக்கு தப்பி சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மிசோரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதை கடத்தி வந்த நபர்கள், சம்பாய் நகரில் விற்பனை செய்ய கொண்டு வந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை