உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாளை அதிகாலை 4:00க்கே மெட்ரோ ரயில் சேவை துவக்கம்

நாளை அதிகாலை 4:00க்கே மெட்ரோ ரயில் சேவை துவக்கம்

புதுடில்லி:சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாளை அதிகாலை 4:00 மணிக்கு மெட்ரோ ரயில் சேவைகள் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாட்டின் 79வது சுதந்திர தினம் கோலாகலமாக நாளை கொண்டாடப்படுகிறது. டில்லி செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள், அழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வசதியாக, நாளை அதிகாலை 4:00 மணிக்கு அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை துவங்கும். காலை 6:00 மணி வரை 30 நிமிடங்கள் இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அதன்பின், நாள் முழுதும் வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும். மத்திய அரசின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க, பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அழைப்பிதழ் வைத்திருப்போருக்கு, விழா நடக்கும் இடத்துக்கு சென்று திரும்ப சிறப்பு இலவச க்யூ.ஆர்., டிக்கெட் வழங்கப்படும். செங்கோட்டைக்கு அருகே லால் குய்லா, ஜூம்மா மசூதி மற்றும் டில்லி கேட் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. சிறப்பு டிக்கெட்டுக்கான தொகையை, பாதுகாப்பு அமைச்சகம் டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி