உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹனி டிராப் வாயிலாக ராணுவ ரகசியம் கசிந்தது அம்பலம்! பாக்.,குடன் தொடர்பில் இருந்த ஆயுத ஆலை ஊழியர் கைது

ஹனி டிராப் வாயிலாக ராணுவ ரகசியம் கசிந்தது அம்பலம்! பாக்.,குடன் தொடர்பில் இருந்த ஆயுத ஆலை ஊழியர் கைது

பெரோசாபாத்: நம் நாட்டின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,க்கு கசியவிட்டதாக, உத்தர பிரதேசத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியரை, பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் நேற்று கைது செய்தனர். பெண்களை வைத்து மயக்கும், 'ஹனி டிராப்' முறையில், இந்த ஊழியரிடமிருந்து ரகசியங்களை ஐ.எஸ்.ஐ., அமைப்பு பெற்றது அம்பலமாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3q8xxt59&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உத்தர பிரதேசத்தின் பெரோசாபாதில் ஆயுத தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, நம் ராணுவத்துக்கு தேவையான 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள், நவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட தளவாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்குள்ள ஆயுதங்கள் தயாரிக்கும் பிரிவில் ரவீந்திரநாத் என்பவர் பணிபுரிந்து வருகிறார். சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்த இவரை, 'பேஸ்புக்' வாயிலாக நேஹா சர்மா என்ற பெண் கடந்தாண்டு தொடர்பு கொண்டார்.

தளவாடங்கள்

தான் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யில் பணிபுரிவதாக கூறிய அவர், பல ஆசை வார்த்தைகள் கூறி ரவீந்திரநாத்தை வலையில் வீழ்த்தினார். இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை தனக்கு தரும்படியும் நேஹா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.அவரது பேச்சு மற்றும் அழகில் மயங்கிய ரவீந்திரநாத், ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தளவாடங்கள் தொடர்பான விபரங்களை நேஹா சர்மாவுடன் பகிர்ந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து, ரவீந்திரநாத்திடம் உத்தர பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர்.

நேரடி தொடர்பு

அவரது மொபைல் போனை பறிமுதல் செய்த அதிகாரிகள், சோதனை நடத்தினர். அதில், நேஹா சர்மாவின் பெயரை 'சந்தன் ஸ்டோர் கீப்பர் 2' என்ற பெயரில் அவர் பதிந்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொழிற்சாலையின் தினசரி தயாரிப்பு பட்டியல், அரசு அறிக்கைகள், ரகசிய கடிதங்கள், ட்ரோன்கள் தயாரிப்பு தொடர்பான ஆவணங்கள், ககன்யான் திட்டம் பற்றிய விபரங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை 'வாட்ஸாப்' வாயிலாக நேஹாவுக்கு, ரவீந்திரநாத் அனுப்பியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.இதற்காக, கணிசமான தொகை வழங்குவது குறித்து அவர் பேரம் பேசியிருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் ரவீந்திரநாத் நேரடி தொடர்பில் இருந்ததும், ரகசிய ஆவணங்களை கசியவிட்டதும் தெரியவந்ததை அடுத்து, அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.அவரது நெருங்கிய நண்பரான ஆக்ராவைச் சேர்ந்த நபரும் கைது செய்யப்பட்டார். இருவரின் மொபைல் போன்களிலும், இந்திய ராணுவ ரகசியங்கள் கசியவிட்டது தொடர்பாக நடந்த பேச்சு உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Yasararafath
மார் 15, 2025 18:26

அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்


M Ramachandran
மார் 15, 2025 15:43

மந்த புத்திகாரான் அவளிடத்திலிருந்து எளிதாவது கரைந்திருந்தான் என்றால் இவனையய பொற்காற்று அவர்கள். பாகிஸ்தான் காரங்கள் எச்சில் மாம்பழத்தில் தான் நக்கி ருசி பார்பான்கள் அவர்கள் பிறப்பு அப்படி.


Sivaprakasam Chinnayan
மார் 15, 2025 18:09

விற்றவன் எச்சிலை நக்கி பார்ப்பவன்


M Ramachandran
மார் 15, 2025 15:40

இவனொரு ஏழ ரை சனி யிருப்பதைய்ய வைத்து திருப்தி கொள்ளாமல் பறப்பதைய்ய பிடிப்பது போல் இப்போ கிளே முகரை பல் எல்லாமே டேமேஜ் ஆயிடுச்சி. இவன் குடும்பதையும் ஆட்டி படைக்கும்


பேசும் தமிழன்
மார் 15, 2025 13:02

ஆளை பார்த்தால்..... அப்படியே திருட்டு மாடல் ஆட்களுக்கு உண்டான அத்தனை அம்சங்களும் பொருந்தி உள்ளது.


Sivaprakasam Chinnayan
மார் 15, 2025 18:12

அப்படியே திருட்டு உருட்டி பயலுங்கள்


RAMESH
மார் 15, 2025 12:41

சம்பத் கீழ்த்தரமானநாகரீகமற்ற பதிவு . யார் தவறு செய்தாலும் தண்டிக்க படவேண்டியவர்கள். இங்கே பதிவு செய்துள்ள அனைவருமே அவனுக்கு தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்கள் . கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை வெறும் சிலிண்டர் வெடிப்பு என்று கூறிய ஏன் இன்னும் கைது செய்யவில்லை .


Sivagiri
மார் 15, 2025 12:38

அப்டியே கன்டினியூ - பண்ணி அந்த பெண்ணையும் , இங்க வர சொல்லி புடுச்சிருக்கலாம்ல , அது ஆணா பொண்ணா , ஷர்மாவா , கான்-ஆ , ன்னு தெரிஞ்சிரும்ல . . .


Sivaprakasam Chinnayan
மார் 15, 2025 18:14

சர்மா என்று தெளிவாக ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது


Kumar Kumzi
மார் 15, 2025 12:33

இந்த தேசத்துரோகிகளை விசாரித்துவிட்டு சுட்டுக்கொல்லுங்கள் இதை செய்தால் தான் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்


M. PALANIAPPAN, KERALA
மார் 15, 2025 12:32

தேச துரோகிகளை சுட்டு கொல்ல வேண்டும்


Sidharth
மார் 15, 2025 12:22

தேசபக்தன் ரவீந்திரநாத்


Venkatesan Ramasamay
மார் 15, 2025 11:34

சரியாய் சொன்னீர்கள் ....


முக்கிய வீடியோ