உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தினை ராணி ராய்மதிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

தினை ராணி ராய்மதிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோராபுட் : ஒடிசாவில், 72 வகையான பாரம்பரிய அரிசி மற்றும் 30 வகை தினைகளை பாதுகாத்த பழங்குடியின பெண்ணான ராய்மதி கெயூரியாவுக்கு, ஒடிசா பல்கலையின் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.ஒடிசாவின், கோராபுட் மாவட்டம், நுவாகுடா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ராய்மதி கெயூரியா, 36. வறுமை காரணமாக கல்வி கற்க முடியவில்லை.குடும்பத்தை காப்பாற்ற இளம் வயதிலேயே விவசாய கூலியாக பணியாற்ற துவங்கினார். அப்போது முதல் பாரம்பரிய தானியங்களை பாதுகாப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.தன் மூதாதையர்களின் விவசாய முறைகளால் உந்தப்பட்டு, அழிந்து போகும் அபாயத்தில் இருந்த பயிர்களை மீட்டெடுக்கும் பணியை துவக்கினார்.இதற்கு, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் உதவியை நாடியதாக அவர் கூறியுள்ளார். இந்த வகையில், 72 வகை பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் 30 வகை தினை வகைகளை இதுவரை பாதுகாத்துள்ளார்.தினை வகைகள் மீது அதிக ஈடுபாடுள்ள இவர், 'தினை ராணி' என்றும் அழைக்கப்படுகிறார்.இதற்காக பல்வேறு விருதுகளையும் பெற்று உள்ளார். கடந்த ஆண்டு டில்லியில் நடந்த, 'ஜி - 20' உச்சி மாநாட்டுக்கு ராய்மதி அழைக்கப்பட்டார். அங்கு, தினை சாகுபடிக்கு தான் அளித்துள்ள பங்கு குறித்து விரிவாக விளக்கினார்.இவருக்கு, ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலை கவுரவ டாக்டர் பட்டம் அளித்து கவுரவித்துள்ளது.நேற்று முன்தினம் நடந்த பட்டமளிப்பு விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவ டாக்டர் பட்டத்தை ராய்மதிக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kesavan.C.P.
டிச 08, 2024 05:03

விதைகள் தேவைக்கு தொடர்பு கொள்ள முடியாமை ஐ தவறாக சொல்லாமல் வேறு நபர்கள் விதைகள் விநியோகம் அமைப்புகளிடம் முயற்சி க்க வேண்டும் .


Sundar aanandar Aanandar
டிச 07, 2024 13:03

வாழ்த்துக்கள்


Natchimuthu Chithiraisamy
டிச 07, 2024 10:40

சேவை என்பது பட்டதுக்காக இருக்கக்கூடாது. பல லட்சம் பேர் இந்த சேவையை செய்யவேண்டும். செய்த சேவையை பாராட்டுவோம்.


sankar
டிச 07, 2024 09:21

மனப்பூர்வமான வாழ்த்துக்கள்


N Annamalai
டிச 07, 2024 06:23

அருமை அருமை


Svs Yaadum oore
டிச 07, 2024 06:19

பழங்குடியின பெண் ....72 வகை பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் 30 வகை தினை வகைகளை இதுவரை பாதுகாத்துள்ளார்.....ஜி - 20 உச்சி மாநாட்டுக்கு ராய்மதி அழைக்கப்பட்டார்......இவர்களை கெளரவிப்பது மோடி அரசு ......இங்குள்ள இயற்கையை அழித்து மலையை பெயர்த்து கேரளாவுக்கு அனுப்புவது விடியல் திராவிடனுங்க ....


நிக்கோல்தாம்சன்
டிச 08, 2024 08:52

இப்படியெல்லாம் உண்மையை உரத்து கூறினால் நாட்டை கெடுக்கும் வந்தேறிகள் உங்களை சாங்கி என்று முத்திரை குத்துவார்கள் உஷாரு


நிக்கோல்தாம்சன்
டிச 07, 2024 04:19

தினை விதைகளுக்காக இவரை தொடர்பு கொள்ள முயற்சித்து தோல்வியடைந்துள்ளேன்


புதிய வீடியோ