வாசகர்கள் கருத்துகள் ( 72 )
வாய்பில்லை ராஜா வாய்பில்லை
மக்கள் விருப்பமும் அதுதான். ஆனால் கடை நேரத்தில் இந்த மக்கள் திமுகவினர் கொடுக்கும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு, அதை மானம் மரியாதையை விட்டு வாங்கிக்கொண்டு அந்த திமுகவுக்கே ஓட்டுக்களை போடும்.
கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியது, அண்ணாமலை கொடுத்த பல ஊழல் புகார் ஆகியவற்றின் மீது, இதுவரை எந்த விசாரணையும் இல்லை. இதற்கெல்லாம் மேலாக, 2ஜி புகழ் கனிமொழியை, ஆப்பரேஷன் சிந்துார் குழுவில் சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பி அழகு பார்த்தது பா.ஜ.,வின் மத்திய அரசு. இப்படி அனைத்து கவுரவங்களையும் அனுபவித்து விட்டு, மாநில அரசுக்கு மத்திய அரசு உதவுவதே இல்லை என்று, தி.மு.க., கூறுகிறது. ஐக்கிய முன்னணியின் மன்மோகன் சிங் ஆட்சியில், 2ஜி வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்ட கனிமொழியும், ராஜாவும், பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை ஆனது, நாடு முழுதும் பரபரப்பாக பேசப்பட்டது. நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல்கள், தவறுகள் மீது பா.ஜ., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை, தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர். அதே போல், அ.தி.மு.க.,வின் ஊழல் முகங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி, பா.ஜ.,வை தமிழக மக்களுக்கு மிக நன்றாக அடையாளம் காட்டிய அண்ணாமலையை ஓரந்தள்ளி, அவர் வாயாலேயே, அ.தி.மு.க.,வின் பழனிசாமி தான் முதல்வர் எனச் சொல்ல வைத்த பா.ஜ.,வையும் மக்கள் கவனித்து வருகின்றனர். அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், தமிழகத்தில் ஊழலற்ற, அறிவுமிக்க தலைவரான அண்ணாமலையை, முன்னாள் முதல்வர் காமராஜர் போல உருவாகாமல் தடுத்து விட்டனர் என்பதே தற்போதைய பேசுபொருளாகி விட்டது
எச்ச ராசாவின் மகனா நீங்கள். அதே போல அழகா பேசுறீங்களே?
அண்ணாமலை, பா.ஜ., தலைவராக இருந்தவரையில், டி.எம்.கே., பைல்ஸ் என்ற தலைப்பில் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மக்கள் அவரை உற்று நோக்கினர் தி.மு.க.,வினர் பயந்தனர். டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, டி.ஆர்.எஸ்., கவிதா போன்று, இங்கும் பலர் கைதாவர் என, மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், டில்லிக்குச் சென்ற தி.மு.க.,வினர், அங்கு ஆட்சியாளர்களைப் பார்த்து வந்தவுடன், சோதனைகள், வழக்குகள் அனைத்தும் நின்றுவிட்டன. வீராவேசமாக, ஒன்றிய அரசு எனச் சொல்லி இங்கு விமர்சனம் செய்வது அசிங்கப்படுத்துவது, ஆனால், டில்லி சென்று நட்பு கொண்டாடுவது... இது தான் திராவிட கலாசாரம் என, பொதுமக்கள் கிண்டலடிக்கின்றனர்.
உங்க தலைவர் உங்களுக்கு 200 ரூவா கொடுத்துவிட்டு அவர் 2000 கோடி சேர்த்துவிட்டார். துதி பாடியது போதும்.
அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் ஆக இருந்த போது தி மு க மீது கொடுக்கப்பட்ட ஊழல் பைல்ஸ் மற்றும் ஆதாரங்கள் குறித்து இது வரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் பதினொரு ஆண்டுகளாக ஒரு நடவடிக்கை கூட இல்லை . சென்ற தேர்தலில் தமிழ் நாட்டில் பிஜேபி வாங்கிய வாக்கு அண்ணாமலைக்கு ஆக தானே தவிர வேற யாருக்காகவும் இல்லை வரும் சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் மண்ணை கவ்வுவீர்கள்
அதை செய்யுங்க.. கோடி புண்ணியமா போகும்... இந்த திருட்டுக்கூட்டம் அத்தனையும் வாரி சுருட்டிருச்சு.. சாராயத்தாலே மக்கள் நாசமா போயிட்டாங்க..
அமித் ஷா திருப்பரங்குன்றத்தில் வந்து போட்டியிடவும்.
எந்த வித்தியாசமும் இல்லை.
திமுக செய்யும் அத்தனை அயோத்தனத்தையும் கொள்ளைகளையும் ஊழல்களையும் தண்டிக்கும் இடத்தில் இருந்து கொண்டு நாடகம் ஆடுகின்ற கூட்டம்
ஊழல் மீதான நடவடிக்கை????
துடைத்தெறிவதற்க்கு திமுக ஒன்னும் தூசு அல்ல. மக்களும் முட்டாள்களில்லை. நறுக்குன்னு ஒரு 4 திட்டத்தை எய்ம்ஸ், மெட்ரோ போல தமிழ்நாட்டுக்கு நிறைவேற்றிவிட்டு ஒட்டு கேட்க வாங்க.. இல்லாட்டி கஷ்டம் தான்.
ஆமா திருட்டு தீயமுக தூசு இல்லை தான். ஆனா எண்ணெய் பிசுக்கு. அதுவும் எத்தனையோ காலமான பிசுக்கு. உடனே துடைச்சு எடுக்குறது கஷ்டம்தான். அந்த தைரியத்தில் தானே க.உ.பிங்க ஏகடியமா பேசுறானுங்க. முதல்ல ஏகடியமா பேசுறவனுங்களை வெளுத்து கட்டினாலே போதும். எரிவதை பிடுங்கினால் கொதிக்குறது தானே அடங்கும்.