உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வந்தே மாதரம் பாடல் மகிமையை குறைத்து மதிப்பிடும் கட்சிகள்: பார்லி.யில் அமித் ஷா விமர்சனம்

வந்தே மாதரம் பாடல் மகிமையை குறைத்து மதிப்பிடும் கட்சிகள்: பார்லி.யில் அமித் ஷா விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேற்கு வங்க தேர்தலுடன் தொடர்படுத்தி வந்தே மாதரம் பாடலின் மகிமையை சிலர் குறைத்து மதிப்பிட விரும்புகின்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து லோக்சபாவில் நேற்று சிறப்பு விவாதம் நடந்தது. பிரதமர் மோடி இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1lqzxfge&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்றைய தினம், ராஜ்யசபாவில் சிறப்பு விவாதம் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதத்திற்கு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். அப்போது அவையில் அவர் பேசியதாவது; வந்தே மாதரம் அவசியம் குறித்து லோக்சபாவில் சில எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். வந்தே மாதரம் மீதான அர்ப்பணிப்பு என்பது மிகவும் முக்கியமானது, இப்போது தேவைப்படுகிறது. 2047ம் ஆண்டு தொலைநோக்கு பார்வையாக வைத்துள்ள பிரகாசமான எதிர்காலத்திற்கு, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக வந்தே மாதரம் பாடல் இருக்கும். இரு அவைகளிலும் வந்தே மாதரம் பற்றிய விவாதம் எதிர்கால சந்ததியினருக்கு அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், மகிமையையும் புரிந்துகொள்ள உதவும்.மேற்கு வங்கத்தில் நடக்க உள்ள தேர்தல்கள் காரணமாக இந்த விவாதங்கள் நடத்தப்படுவதாக சிலர் நினைக்கின்றனர். அங்கு நடைபெற உள்ள தேர்தல்களுடன் இதை தொடர்புப்படுத்தி பேசுவதன் மூலம் தேசிய பாடலின் மகிமையைக் குறைத்து மதிப்பிட விரும்புகின்றனர். பாடலை இயற்றிய பங்கிம் பாபு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பது உண்மைதான். ஆனந்த மடமும் வங்கத்தில் இருந்து வந்தது தான்.ஆனால் வந்தே மாதரம் மேற்கு வங்கம் அல்லது ஒரு நாட்டுக்குள் சுருக்கி வைத்து விட முடியாது. எல்லையில் இருக்கும் ராணுவ வீரரும் சரி, உள்நாட்டில் இருக்கும் ஒரு போலீஸ்காரரும் சரி, தம் இன்னுயிரை தியாகம் செய்யும் போதும் அவர் எழுப்பும் ஒரே முழக்கம் வந்தே மாதரம் மட்டுமே. இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Skywalker
டிச 09, 2025 18:36

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே - சுப்பிரமணிய பாரதியார் , All so called tamil supporters who oppose vande mataram will be silent


M Ramachandran
டிச 09, 2025 17:24

உ ப்ப குலாவும் திமுகவும் காங்கரஸ்சும் . முன்பு தீ யா மு கா காங்கரஸ் காரர்களை வந்தே மாதரம் பாடலை கேளி செய்து வந்தே ஏமாத்ரோம் என்று கருணாநிதி பாடி எள்ளி நகையாடினர். அதேற்கெல்லாம் இத்தாலி காங்கரஸ் காரக்ளுக்கு அக்கறையில்லை. காங்கரஸ் இன்றைய நிலை சிஃகு போத்த போனி பொச்ச நிண்டுத்த ச்சாளு. மானம் போன போவுது வயிறு நிறைந்தா சரி என்று அர்த்தம்.


Thravisham
டிச 09, 2025 17:24

தமிழ்த்தாய் பாடலை பற்றி தமிழக சட்டசபையில் விவாதம் நடக்குமா


Skywalker
டிச 09, 2025 16:43

Please don't use vande mataram for political purposes and waste taxpayers money on debates and instead conduct useful discussions like about the exploitation by the aviation companies


Kanagaraj
டிச 09, 2025 16:24

Anti Indian.


S.F. Nadar
டிச 09, 2025 15:50

இதைவைத்து ரெண்டு மாதம் இன்னும் பார்லியில் விவாதம் செய்யலாமே.


MARUTHU PANDIAR
டிச 09, 2025 15:15

வந்தே மாதரம் பாடல் சிதை பட்டதை நாலு வரியில் சொல்லி விட்டு அடுத்த வேலைக்கு போகலாமே?


முக்கிய வீடியோ