மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
பெங்களூர : ''மேலவை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு விஷயத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், என்னிடமும், கட்சியின் மூத்த தலைவர்களிடமும் ஆலோசனை நடத்த வேண்டும். மாவட்ட வாரியாக, ஜாதி வாரியாக கட்சிக்கு உதவியவர்கள், எந்த சமுதாயத்தினர் காங்கிரசுக்கு ஆதரவாக நிற்கின்றனர் என்பதை, எங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் மட்டும் அமர்ந்து தன்னிச்சையாக முடிவு செய்வது சரியல்ல,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் குற்றம் சாட்டினார்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. மாநில காங்., தலைவருமான சிவகுமார் துணை முதல்வராக பதவி வகிக்கிறார். முதல்வர் பதவிக்காக முட்டி, மோதிய இருவரும் உள்ளுக்குள் ஒருவர் மீது ஒருவர் அதிருப்தியில் இருந்தாலும் அதை வெளி காண்பிக்காமல், அரசு இயந்திரத்தை இழுத்து செல்கின்றனர்.அரசில் எந்த விஷயமாக இருந்தாலும், இவர்களே அமர்ந்து பேசி முடிவு செய்கின்றனர். மற்ற அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிப்பது இல்லை. லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்வு, பிரசார திட்டங்கள் என மற்ற விஷயங்களில், மூத்த அமைச்சர்கள், தலைவர்களின் கருத்தை கேட்காமல், தன்னிச்சையாக முடிவு செய்தனர். மேலவை தேர்தல்
வரும் ஜூனில் நடக்கும் மேலவை தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு செய்வதிலும் கூட, முதல்வர், துணை முதல்வர் மட்டுமே கலந்தாலோசித்து முடிவு செய்தனர். முதல்வர், துணை முதல்வரின் செயலால், மூத்த அமைச்சர்கள் அதிருப்தியில் கொதிக்கின்றனர். ஆனால் பலரும் தங்கள் எரிச்சலை, உள்ளுக்குள் மறைத்து வைத்துள்ளனர். வாயை திறந்தால் அமைச்சர் பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் மவுனமாக உள்ளனர். ஏனென்றால் லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என, காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.முதல்வர், துணை முதல்வர் மீது கோபத்தில் உள்ள அமைச்சர்களில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரும் ஒருவர். முதல்வருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் உள்துறை அமைச்சர் தான். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் துறையை நிர்வகித்தாலும், தனக்கு அரசில் முக்கியத்துவம் இல்லை என்ற விரக்தி பரமேஸ்வருக்கு உள்ளது.அரசில் முக்கிய பதவியில் இருந்தும் வருத்தம், கசப்பான அனுபவம் ஏற்படுவது இவருக்கு புதிதல்ல. இதற்கு முந்தயை காங்கிரஸ் அரசிலும், பரமேஸ்வர் உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது இவரது எதிர்ப்பை பொருட்படுத்தாமல், உள்துறை ஆலோசகராக கெம்பண்ணாவை, அன்றைய முதல்வர் சித்தராமையா நியமித்திருந்தார்.உள்துறைக்கு அமைச்சர் இருந்தும், துறை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும், கெம்பண்ணாவே முடிவு எடுத்தார். இது குறித்து பரமேஸ்வர் பகிரங்கமாகவே அதிருப்தி தெரிவித்தார். கெம்பண்ணாவை நீக்கும்படி வலியுறுத்தியும் முதல்வர் பொருட்படுத்தவில்லை. 'பெயரளவுக்கு மட்டுமே நான் அமைச்சராக இருக்கிறேன்' என கூறி வருந்தினார். இப்போதும் இதேபோன்ற சூழ்நிலையில், பரமேஸ்வர் சிக்கியுள்ளார்.இது குறித்து, பெங்களூரில் நேற்று பரமேஸ்வர் அளித்த பேட்டி:கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், என்னிடமும், கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். மேலவை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு விஷயத்தில், கட்சி மற்றும் அரசில் பணியாற்றியவர்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும். இது கட்சிக்கு உதவியாக இருக்கும். ஜாதி வாரியாக
கட்சியின் மூத்தவர்கள், அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள், கருத்துகளுக்கு அவர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாவட்ட வாரியாக, ஜாதி வாரியாக கட்சிக்கு உதவியவர்கள், எந்த சமுதாயத்தினர் காங்கிரசுக்கு ஆதரவாக நிற்கின்றனர் என்பதை, எங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் மட்டும் அமர்ந்து முடிவு செய்வது சரியல்ல.பா.ஜ.,வினர் எந்த விஷயத்தை முன்வைத்தும், போராட்டம் நடத்தட்டும். அது அவர்களின் உரிமை. அவர்களின் கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளிப்போம்.அரசின் அமைச்சர்கள், கட்சி அலுவலகத்துக்கு வர வேண்டும், மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, அந்தந்த மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று, தலைவர்கள், தொண்டர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்பது, புதிய விஷயம் அல்ல. எட்டு ஆண்டுகள், நான் மாநில தலைவராக இருந்தபோது, இந்த நடைமுறையை கொண்டு வந்தேன்.சமீப நாட்களாக அமைச்சர்கள், கட்சி அலுவலகத்துக்கு வருவதில்லை. இதை கவனித்துள்ள மாநில தலைவர் சிவகுமார், அமைச்சர்கள் கட்சி அலுவலகத்துக்கு வர வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.மாநில தலைவரை மாற்ற வேண்டுமா, வேண்டாமா என்பதை, கட்சி மேலிடம் முடிவு செய்யும். நான் எட்டு ஆண்டுகள் மாநில தலைவராக இருந்தேன். இரண்டு முறை என்னை மாற்ற வேண்டும் என, வலியுறுத்தல் வந்தும், மேலிடம் என்னை பதவியில் நீட்டிக்க வைத்தது.இப்போதும் இந்த விஷயத்தில், முதல்வர் சித்தராமையாவோ, துணை முதல்வர் சிவகுமாரோ முடிவு செய்ய முடியாது. சிவகுமார் துணை முதல்வர், மாநில தலைவர் என்ற இரண்டு பதவிகளை நிர்வகிக்கிறார். இரண்டு பதவிகளை நிர்வகிக்கும் திறன், அவருக்கு உள்ளது. சுமையாக இருந்தால் அவரே கூறுவார். பதவி ஆசை
தன்னை மாநில தலைவராக நியமித்தால், நிர்வகிக்க தயார் என, அமைச்சர் ராஜண்ணா கூறியுள்ளார். கட்சிக்காக தியாகம் செய்ய பலர் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.பலாத்கார வழக்கு தொடர்பாக, எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, 'புளூ கார்னர்' நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய, அனைத்து முயற்சிகளும் நடக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7