உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபையில் ரம்மி விளையாடிய அமைச்சர் விளையாட்டு துறைக்கு மாற்றம்

சட்டசபையில் ரம்மி விளையாடிய அமைச்சர் விளையாட்டு துறைக்கு மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : மஹாராஷ்டிரா சட்டசபையில், 'ஆன்லைன் ரம்மி' விளையாடி சர்ச்சையில் சிக்கிய அமைச்சரிடம் இருந்து வேளாண் துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மாணிக்ராவ் கோகடே, வேளாண் துறை அமைச் சராக இருந்தார். இவர், மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது, சட்டசபையில் மொபைல் போன் வாயிலாக, ஆன்லைன் ரம்மி விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த காட்சிகள் இணையத்தில் வெளியானதால், எதிர்க்கட்சியினர் கொந்தளித்தனர். இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், சபை இடைவேளையில் சட்ட சபை நிகழ்வுகளை பார்க்க, 'யு டியூப்' தளத்திற்கு சென்றதாக கூறினார். அப்போது திடீரென்று, 'ஜங்கிலி ரம்மி' என்ற ஆன்லைன் விளையாட்டு திரையில் தோன்றியதாகவும், உடனே அதை தவிர்த்து விட்டதாகவும் விளக்கம் அளித்தார். அது மட்டுமில்லாமல், சில மாதங்களுக்கு முன் விவசாயிகளை பிச்சைக்காரர்களுடன் அவர் ஒப்பிட்டு பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது. 'விவசாயிகள் மீது அக்கறை இல்லாதவருக்கு அந்த துறையா?' என, பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், அமைச்சர் மாணிக்ராவிடம் இருந்த வேளாண் துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

விவசாயி
ஆக 02, 2025 09:40

அடே யப்பா எவ்வளவு பெரிய தண்டனை


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 02, 2025 08:20

சட்டசபையில் முதல்வரே சினிமாப்பாட்டு பாடினால், அமைச்சரிகளின் காமெடிப்பேச்சுக்களை ரசித்து சிரித்தால் அது முன்னேறிய மாநிலம் ..... மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரண மாநிலம் ...... மஹாராஷ்டிரா தமிழகத்திடம் பாடம் படிக்கணும்.


Azar Mufeen
ஆக 02, 2025 07:32

ஒரிசாவில் சார்க்கென்று ஒரு துறையும், குஜராத்தில் போதை கடத்தல்களுக்கு தேசப்பற்றளர்களுக்கு ஒரு துறையும் ஒதுக்கியவுடன் இவர்களின் திருட்டு கூட்டணி கட்சியும் தமிழகத்தில் ஒதுக்குவார்கள்.


raja
ஆக 03, 2025 08:42

இதோ பார்றா கள்ள குடியேறி வந்தேறிக்கு வர்ற ரோஷத்தை


நிக்கோல்தாம்சன்
ஆக 02, 2025 05:13

தூக்கி கடலில் போட்டிருக்க வேண்டும்


raja
ஆக 02, 2025 04:38

இதைத்தான் வள்ளுவர் அன்றே சொன்னார் இதனை இவன் முடிப்பான் என்று ஆய்ந்து என்றார்... அது சரி நம்ப தமிழகத்தில் சார் க்கு என்று ஒரு துறையும் போதை மருந்து கடத்தல் செய்யும் உடன்பிறப்புக்களுக்கு தனியாக ஒரு துறையும் வேண்டுமே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை