வாசகர்கள் கருத்துகள் ( 21 )
"அணியை நடத்தும் கார்ப்பரேட் நிறுவனத்தினருக்கு எதை பற்றியும் கவலை இல்லை. அவர்களுக்கு வருமானம் தான் முக்கியம். மக்களும் இப்படி மடத்தனமாக நடந்து கொள்ளுமளவுக்கு அறிவு கெட்டுப் போனார்கள் என்றால், இதனை முன் கூட்டியே கணித்துக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவற்துறை அதிகாரிகளும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே. ரசிகர்கள் கூட்டத்தையே கட்டுப்படுத்த அறியாதவர்கள் பயங்கரவாதி தாக்கினால் என்ன செய்வார்கள்? இந்த விழாவை நடத்திய நிர்வாகம் தக்க இழப்பீடு வழங்க வேண்டுமென்பது கோரிக்கை என்றாலும் இது போன்ற மூடத்தனத்தை ஊக்குவிக்க வேண்டுமா என்ற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.
கோப்பை வாங்கிய கோலி டீம் ஏன் பயங்கர மௌனம். இதயம் கல்லாகி விட்டதா.
I cant understand what Atul Wasan wanted to say. Stampede happened well before celebration events, which happened at about an hour or two later. About 11 or 13 died before celebrations looks like.
why government arranges such functions. It is 18 years since IPL started, they are many winners. No one team d a scene/catastrophy like this. what is the accountability for the ruling government which hosted the event in vidhan saudha and inthe stadium
பணம் ஓட்டு விளம்பர மோகம் அரசியல் வியாபாரம் இதெல்லாம் விளையாட்டில் இருக்க கூடாது ஆனால் இவை எல்லாம் புகுந்து விளையாடுகிறது விளையாட்டு வீரர்கள் கம்பீரமானவர்கள் அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் வெட்கம் கெட்டவர்கள் விளையாட்டு வீரர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்
இந்த விபத்துக்கு பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனரை கர்நாடக முதல்வர் சித்தராமையா சஸ்பெண்ட் செய்துள்ளார். அவர் என்ன தவறு செய்தார். போகட்டும். அந்த கமிஷனரை அந்த பதவியில் அமர்த்தியது யார்? சித்தராமையா தானே. ஒரு பொறுப்பில்லாதவரை பதவியில் அமர்த்திய முதல்வர் சித்தராமையாவும் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
அப்படிப் பார்த்தால் உத்தரப் பிரதேச முதல்வரை எத்தனை தடவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்? கடந்த ஜூலை ஹாத்ரஸ் கூட்ட நெரிசலிலும், கும்பமேளாவில் கூட்ட நெரிசலிலும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனரே!
விட்டில் பூச்சிகள் போல மக்களின் வாழ்க்கை வெற்றிக்கொண்டாட்டங்கள் உயிர்களை குடித்து விட்டன. இது போன்ற கொண்டாட்டங்கள் தேவை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது ?
மக்கள்தொகை அதிகம் உள்ள - இன்று உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா - நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் இதுபோன்ற விபரீத வெற்றி கொண்டாட்டங்களுக்கு அனுமதி கண்டிப்பாக மறுக்கப்படவேண்டும். மக்களும் திருந்தமாட்டார்கள். ஆட்சியில் உள்ளவர்களும் புத்தியுடன் செயல்படமாட்டார்கள். அவலம்.
ஒண்ணுமில்லை. நாட்டில் வேலையில்லாத வெட்டிப் பயலுங்க கோடிக்கணக்கில் அதிகமாயிட்டாங்க. எங்கே கிரிக்கெட், அரசியல் வாதிகளின் ரோட் ஷோ நடந்தாலும் ஆஜராயிடுவாங்க. இதெல்லாம் அமெரிக்காவைப் பாத்து நாம வெச்சுக்கிற சூடு.
கபில் செய்யாத சாதனையை நேர்மையா ஜெயிச்சார் உலக கோப்பை அவரே இப்படி தல கால் புரியாம ஆடல
ஐபிஎல் அணிகள் எல்லாம் தனியார் கம்பெனிகள். நமது நேரம் தான் அவர்களின் வருமானம். தயவு செய்து ஐபிஎல் பார்ப்பதை தவிருங்கள். முடியவில்லை என்றால் ஸ்கோர் பார்ப்பதோடு விட்டுவிடுங்கள். அதுவும் முடியவில்லை என்றால் ஹைலைட் பார்ப்பதோடு விட்டுவிடுங்கள். அதுவும் முடியவில்லை என்றால் டிவியில் பார்ப்பதோடு விட்டுவிடுங்கள். டீ-ஷர்ட் வாங்குவது - டோனி - கோஹ்லி புகழ் பாடுவது எல்லாம் மகா வெட்டி வேலை. இந்த நேரத்தயும் பணத்தையும், உங்களின் அல்லது உங்களின் குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு செலவிடுங்கள். சந்தோசமாக இருக்கவேணும் என்றால் சுற்றுலா அல்லது கோவிலுக்கு செல்லுங்கள். இல்லை என்றால் முதியோர் இல்லம் சென்று உதவுங்கள். நம் ஒவ்வொருவரும் நம் குடும்பத்துக்கு தேவை. ஐபிஎல் அணிகளுக்கு நாம் இல்லை என்றால் இங்கே கோடி கணக்கான பேர் உள்ளனர். நம் குடும்பத்துக்கு நம்மை தவிர வேறு எதுவும் இல்லை
இந்த போட்டியை நடத்துவது தனியார் நிறுவனங்கள் ஆனால் கோப்பையை வென்றதற்கு மாநில அரசாங்கமே வெற்றி விழா எற்பாடு செய்தது ஏற்புடையது அல்ல.... ஒரு அரசாங்கத்திற்கு இது நல்லதல்ல...