மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
மும்பை, மஹாராஷ்டிராவில் கடந்த 2023, ஜூலையில், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்.,கை சேர்ந்த அஜித் பவார், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 41 பேருடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அரசில் இணைந்து துணை முதல்வர் ஆனார். சரத் பவார் அணியில் 12 எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் உள்ளனர். இதையடுத்து அஜித் பவார் தலைமையிலான அணி தான் உண்மையான தேசியவாத காங்., என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.இந்நிலையில் இரு அணியினரும் எதிர் அணி எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மனு அளித்திருந்தனர். இதை விசாரித்த சபாநாயகர், ''சரத் பவாரின் முடிவுகளை மீறுவது கட்சித் தாவல் ஆகாது. இது உட்கட்சி கருத்து வேறுபாடு மட்டுமே. கட்சி பிளவுபட்ட போது அஜித் பவாருக்கே அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தது. ''எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன,'' என, நேற்று உத்தரவிட்டார்.
3 hour(s) ago | 1
8 hour(s) ago | 2