உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பள்ளியில் நவீன கழிப்பறை

அரசு பள்ளியில் நவீன கழிப்பறை

தங்கவயல்,: பெமல் நகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நவீன கழிப்பறை திறக்கப்பட்டு உள்ளது.பள்ளிகளில் சுகாதார சீர்கேடுகளை போக்க, பெமல் நகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் அவல நிலையை போக்க, பெமல் நிறுவனம், கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளது.பெமல் நிறுவன இயக்குநர் சுப்பிரமணியம் தலைமையில், மனித வளத்துறை அதிகாரி நீனாசிங் திறந்து வைத்தார். அதிகாரி பூமிநாதன், பள்ளி தலைமை ஆசிரியை உமா உட்பட பலர் பங்கேற்றனர்.பெமல் இயக்குநர் சுப்பிரமணியம் பேசுகையில், ''பொதுவாக அனைவருக்குமே சுகாதாரமான வாழ்வு அவசியம். சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது. மாணவர் உடல் நலனில் பெற்றோர் மட்டுமல்ல, பள்ளி நிர்வாகமும் அக்கறை செலுத்த வேண்டும்.''பள்ளி மாணவர்களையும், தங்கள் பிள்ளைகளை போல கவனிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி உயர் நிலைக்கு செல்ல வேண்டும் என கூறி ஊக்கப்படுத்த வேண்டும். நவீன கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.தலைமை ஆசிரியை உமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை