மேலும் செய்திகள்
இந்தியாவுக்கு வந்த இரண்டாவது ஆப்கன் அமைச்சர்
54 minutes ago
கொடூர தந்தைக்கு 178 ஆண்டு சிறை தண்டனை
1 hour(s) ago
இந்தியா - ரஷ்யா உறவுகள் மேலும் வலுப்பெறும்; ஜெய்சங்கர்
2 hour(s) ago
புதுடில்லி: ஜி 20 நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவ.21 முதல் நவ.23ம் தேதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுவார். இந்த அமர்வில் காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் உரையாற்றுவார். மேலும் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பல உலக நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார்.
54 minutes ago
1 hour(s) ago
2 hour(s) ago