உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லியில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றான மசோதா வலுக்கட்டாயமாக நிறைவேற்றம்; ராகுல் குற்றச்சாட்டு

பார்லியில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றான மசோதா வலுக்கட்டாயமாக நிறைவேற்றம்; ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: பார்லியில் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான ஜி ராம் ஜி மசோதா வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, 'விபி ஜி ராம் ஜி' மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து ராகுல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று இரவு, பாஜ அரசு இருபது ஆண்டுகால மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒரே நாளில் தகர்த்துவிட்டது. 'விபி ஜி ராம் ஜி' மசோதா மறுசீரமைப்பு அல்ல. அது உரிமைகள் அடிப்படையில் வழங்கப்படும் உத்தரவாதத்தை அழித்து, டில்லியில் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு திட்டமாக மாற்றுகிறது. கிராமப்புறத் தொழிலாளிக்கு பேரம் பேசும் சக்தியை வழங்கியது. அந்த திட்டத்தில் பயன் அடைந்தவர்களின் ஊதியங்கள் அதிகரித்தன. கிராமப்புற உள்கட்டமைப்பும் உருவாக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அந்தச் செல்வாக்கைத்தான் இந்த அரசு தற்போது உடைக்க விரும்புகிறது. 100நாள் வேலைத்திட்டம் பொருளாதாரம் முடங்கி, வாழ்வாதாரங்கள் சரிந்தபோது, ​​கோடிக்கணக்கான மக்கள் பசி மற்றும் கடனில் மூழ்குவதிலிருந்து அது தடுத்தது. இது பெண்களுக்குத்தான் அதிகம் உதவியது.தற்போது புதிய சட்டத்தின் கீழ், பெண்களும், தலித்துகளும், பழங்குடியினரும், நிலமற்ற தொழிலாளர்களும், மிகவும் ஏழ்மையான இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும்தான் முதலில் வெளியேற்றப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தச் சட்டம் பார்லிமென்டில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டம், ஆய்வு, நிபுணர் ஆலோசனை மற்றும் பொது மக்கள் கருத்து கேட்பு இல்லாமல் ஒருபோதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது. தொழிலாளர்களைப் பலவீனப்படுத்துவது, கிராமப்புற இந்தியாவின், குறிப்பாக தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் செல்வாக்கைப் பலவீனப்படுத்துவது, அதிகாரத்தை தன்வசப்படுத்தி கொள்வது பாஜவின் இலக்குகள். இந்த அரசாங்கம் அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நடவடிக்கையைத் தோற்கடிக்கவும், இந்தச் சட்டம் திரும்பப் பெறப்படுவதை உறுதிசெய்யவும், தொழிலாளர்கள், பஞ்சாயத்துகள் மற்றும் மாநிலங்களுடன் நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தமிழன் மணி
டிச 20, 2025 01:50

அப்போ நீ போயி பொழம்பு சங்கிகள் தேர்தலில் வெற்றி பெறுவதில்லை காங்கிரஸ் தோற்றுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் தனது பெரியண்ணன் மனப்பான்மை, சரியாக அரசியல் செய்ய தெரியாதது, மற்றும் கூட்டணியில் ஒற்றுமை இல்லாததால்தான் இவனுக நாட்டுல இந்த ஆட்டம் போட்டுகிட்டு இருக்கானுக இனியாவது காங்கிரஸ் தன் தவறுகளை திருத்திக் கொண்டு 2029ல் வெற்றி பெற தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்


sankar
டிச 19, 2025 18:31

இது என்ன ஒரு கேரக்டரோ - அப்பப்ப பொலம்புது, அர்த்தமில்லாம


M.Sam
டிச 19, 2025 16:31

என்ன செய்வது ஜி சர்க்கார் பரும்பான்மையுடன் உள்ளதே அதுதான் உங்க கட்சி கூட்டனில் ஒற்றுமை இல்லை அதுதான் ஜி சர்கார் சாதகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை