உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் உரையாடிய மோடி; டில்லி அரசு மீது கடும் குற்றச்சாட்டு

மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் உரையாடிய மோடி; டில்லி அரசு மீது கடும் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை தெரிவித்தார்.டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை மறுதினம் (பிப்.,05) ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. டில்லியில் நேற்று பா.ஜ., வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி ஓட்டு சேகரித்தார். பிரசாரத்தில் ஆம்ஆத்மி அரசை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.இந்நிலையில், இன்று (பிப்.,03) டில்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ' டில்லியில் நான் கேள்விப்பட்டேன். பாஸ் ஆவார்கள் என்று உறுதியாக தெரிந்த மாணவர்களை மட்டுமே 9ம் வகுப்புக்கு மேலே செல்ல ஆம் ஆத்மி அரசு அனுமதிக்கிறது. தேர்வு முடிவுகள் மோசமாக இருந்தால், அரசின் நற்பெயர் கெட்டுவிடும் என்று எண்ணுகிறார்கள்' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

அப்பாவி
பிப் 04, 2025 10:39

இவர்கிட்டே பேசுன மாணவர்களுக்காவது வேலை கிடைக்குமா இல்லே பரோட்டா சுடப் போயிடுவாங்களா?


Rengaraj
பிப் 03, 2025 16:48

துருவேசன் அவர்களே அவர் பிரதமர் என்பது போன்று ஒரு கட்சியின் எம்பி. கூட. அவர் சார்ந்த கட்சிக்காக வேலை செய்ய வேண்டும். அதை செய்யும்போது அவர் அரசியல்வாதி. அப்படிதான் பேசவேண்டும். இதில் தவறு காண்பது என்பது நம் அறியாமை. அவர் உண்மையை மறைத்து பொய்கூறினால் விமர்சனம் செய்யலாம். அவர்தான் மாணவர்களோடு பேசுகிறாரே. ? நீங்களோ நானோ அவரிடம் கேள்விகேட்க நினைக்கும் தூரத்தில் இல்லை. அவரை பிடிக்காத மாணவர்கள் , அல்லது கேஜ்ரிவால்தான் அள்ளவேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் அவரிடம் எந்தவிதமான கேள்வியும் கேள்விகேட்கலாமே சிங்கம் போன்ற தைரியமான மாணவர்கள் என்றால் அவர் பண்ணுதேல்லாம் நடிப்பு என்று அவரிடமே சொல்லலாமே


Mario
பிப் 03, 2025 16:31

வடை


veera
பிப் 03, 2025 17:56

வடை...தூக்கி போடுறோம் ....கவ்விட்டு ஒடி போயிடு லண்டனுக்கு..


Sampath Kumar
பிப் 03, 2025 16:04

குரு குல கல்விக்கு அச்சாரம் போல நடத்துங்க


Barakat Ali
பிப் 03, 2025 15:45

மாணவர்கள் முன்பு அரசியல் பேசியது தவறு ....


baala
பிப் 03, 2025 15:41

டெல்லி அரசை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதை மறைக்கிறார் போலும்.


PERUMAL C
பிப் 03, 2025 15:10

அவரு எலேச்டின் சமயத்துல வேலை செய்யறரு , சில பேரு அப்ப கூட வேலை செய்யறது இல்ல.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 03, 2025 16:59

இவரு இப்படி செய்யறதுக்கு பேரு வேலையா? பெருமாள் சார், நாங்க என்ன வட இந்தியர்கள் னு நெனச்சுட்டீங்களோ?? இப்படி இளம் நெஞ்சங்களில் பொய்களை விதைப்பதும் பரப்புவதும் ஆபத்தானது.


Duruvesan
பிப் 03, 2025 14:48

உலகமகா நடிப்புடா சாமி, எலெக்ஷன் வந்தா இவரு ரொம்பவே சுறு சுறுப்பு


guna
பிப் 03, 2025 15:09

என்ன ஒரு ஈன பிறவி நீ கொதடிமாயே


Palanisamy Sekar
பிப் 03, 2025 15:56

மூடனே இதில் எங்கிருந்து நடிப்பு வந்தது உன் அறிவுக்கு? இது பெருமையான விஷயம்டா. எந்த நாட்டில் இப்படி மரத்தடியில் மாணவர்களோடு அமர்ந்து பேசிய பிரதமரை கண்டுள்ளாய்? பிரதமர் மோடி மிக எளிமையான மனிதர். சாதாரண குடும்பத்திலிருந்து முன்னேறி வந்தவர். அதனால் அவரால் சகஜமாக மாணவர்களோடு மரத்தடியில் அமர்ந்து பேச முடிகின்றது. உபிஸ் உனக்கு அதுபற்றியெல்லாம் அறிய அறிவு போதாது


ஈசன்
பிப் 03, 2025 16:24

பத்து வருடத்திற்கும் மேல், நீங்க என்னதான் dhuruvi dhuruvi பார்த்தாலும் மோடிஜி மேல் ஒரு கரை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. பாவம் - ஒலாகமகா நடிப்பு, வாய் சவடால், வெளிநாட்டு பயண செலவு, விலை உயர்ந்த ஆடைகளை அணிகிறார் - இது போன்ற விஷயங்கள் மட்டுமே சொல்லி உங்கள் அரிப்பை சொரிந்து விட்டு கொள்ளுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை