உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி எப்போதுமே என் நண்பர்: டிரம்ப் அதிபரின் உணர்வை பாராட்டுகிறேன்: பிரதமர்

மோடி எப்போதுமே என் நண்பர்: டிரம்ப் அதிபரின் உணர்வை பாராட்டுகிறேன்: பிரதமர்

புதுடில்லி : இந்தியா குறித்து, கடந்த சில மாதங்களாக எதிர்மறை கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், 'நான் எப்போதுமே மோடியுடன் நண்பராக இருப்பேன்' எனக்ககூறி திடீர், யு - டர்ன்' அடித்துள்ளார். இதற்கு, டிரம்பின் உணர்வுகளை பாராட்டுவ தாக பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். எதிரான கருத்துகள் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரி விதித்த டிரம்ப், பின்னர் அதை 50 சதவீதமாக உயர்த்தினார். இந்த விவகாரம், இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசலை ஏற்படுத்தியது. மேலும், பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் நான்கு முறை பேச முயற்சித்ததாகவும், ஆனால், அவரின் அழைப்பை மோடி புறக்கணித்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், சீனாவின் தியான்ஜினில் சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோரை சந்தித்து மோடி பேச்சு நடத்தினார். அப்போது, அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நெருக்கடியான சூழலில் மூவரும் சந்தித்து பேசியது, உலக அரசியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து, 'இருண்ட சீனாவிடம், ரஷ்யாவையும், இந்தியாவையும் அமெரிக்கா இழந்து விட்டது' என, தன் சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் பதிவிட்டிருந்தார். அ மெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ உட்பட, டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், 'இந்தியாவுடனான உறவை மீட் டெடுப்பது' குறித்து, அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டிரம்ப், “நான் எப்போதும் அதை செய்வேன். நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்தத் தருணத்தில் அவருடைய செயல் எனக்குப் பிடிக்கவில்லை. சூசகம் ''இ ருப்பினும், இந்தியா - -  அமெரிக்கா இடையேயான உறவு மிகவும் சிறப்பாகவே உள்ளது. அதனால், இதுகுறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. ''எப்போதாவது இதுபோன்ற தருணங்கள் ஏற்படுவதுண்டு. மற்றபடி, நான் எப்போதும் மோடியுடன் நன்றாகப் பழகி வருகிறேன். சில மாதங்களுக்கு முன் கூட, அவர் அமெரிக்கா வந்து சென்றார்,” என, தெரிவித்தார். இதற்கு, பிரதமர் மோடி தன் சமூக வலைதள பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், 'அதிபர் டிரம்பின் உணர்வுகளையும், இந்திய - அமெரிக்க உறவுகள் குறித்த அவரது நேர்மறையான மதிப்பீட்டையும் நான் ஆழமாகப் பாராட்டுகிறேன். 'இந்தியாவும், அமெரிக்காவும் மிக நேர்மறையான, முன்னோக்கு சிந்தனையுடன் விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன' என, தெரிவித்துள்ளார். இருப்பினும், டிரம்ப் உபயோகித்த நண்பர் என்ற வார்த்தையை பிரதமர் மோ டி பயன் படுத்தவில்லை. அமெரிக்காவின், 'திடீர்' நட்பை விரும்பாததை சூசகமாக தன் பதிலில் மோடி கூறியதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இருப்பினும், அதிபர் டிரம்பின் மனமாற்றத்துக்கு பதிலளித்து, இரு நாட்டு உறவுகளையும் மீட்டெடுக்கும் முயற்சியில் பிரதமர் மோடி இறங்கியுள்ளதற்கும் ஆதரவு கருத்துகள் பெருகி வருகின்றன.

'உறவுக்கு முக்கியத்துவம்'

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “அமெரிக்காவுடனான நம் நல்லுறவுக்கு பிரதமர் மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். அதிபர் டிரம்ப் விஷயத்தில், மோடி எப்போதும் மிகச்சிறந்த தனிப்பட்ட நல்லுறவைக் கொண்டுள்ளார். நாங்கள், அமெரிக்காவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்த நேரத்தில், அதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kandasamy karuppanagounder
செப் 08, 2025 06:53

நன்றி


venugopal s
செப் 07, 2025 17:09

போதும் போதும், இரண்டு பேரும் போய் ஆகவேண்டிய காரியத்தை பாருங்கள், ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன!


M Ramachandran
செப் 07, 2025 12:35

ஏன் அழுது கிட்டே பொலம்பிக்கிட்டிருக்கே.


vbs manian
செப் 07, 2025 10:24

ஓங்கி அடித்து விட்டு பிளாஸ்டர் போடுகிறார்.


பேசும் தமிழன்
செப் 07, 2025 09:13

உன்னை யார் கேட்டார்கள்.. நண்பர்... அதனால் தான் நண்பரின் நாட்டு மக்களுக்கு 50 சதவீதம் வரி போட்டீர்களா.. அதற்க்கு சாக்கு போக்கு இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது என்று காரணம் வேறு.. ஆனால் அதே ரஷ்யா நாட்டிடம் எண்ணெய் வாங்கும் ஐரோப்பா மற்றும் சீனா நாடுகளுக்கு வரி கிடையாது.... என்னய்யா உங்க நியாயம்.


Mecca Shivan
செப் 07, 2025 08:14

தனிப்பட்ட முறையில் எங்க நட்பு தொடரும்னு சொல்றார்.


Naga Subramanian
செப் 07, 2025 06:43

நமது பிரதமரின் இந்த "அளவான" கருத்து முக்கியமானது. அமெரிக்காவுக்கு அடிமையாகவும் வேண்டாம் வெறுப்புடனும் செல்ல வேண்டாம். இதுதான் தொழில் ராஜதந்திரம்.


திருமூர்த்தி
செப் 07, 2025 05:48

எங்கள் தலைவர் மோடி ஜீ யை அவமதித்து மிரட்டிய அமெரிக்காவை உண்மையான நண்பனாக ஏற்றுகொள்ள கூடாது.அமெரிக்க பொருட்களை புறக்கணிப்பும்.இந்தியா பொருட்களை பயன்படுத்துவோம். வாழ்க பாரதம்.


SUBBU,MADURAI
செப் 07, 2025 05:19

பிரதமரின் இந்த விளக்கவுரை தேவையில்லாதது இதுவரை அமைதியாக இருந்தது போல் இப்போதும் இருந்திருக்கலாம்!


Artist
செப் 07, 2025 06:56

நீங்கள் இதை முடிவெடுக்கும் இடத்தில இல்லையே


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 07, 2025 08:51

சுப்பு ஜி ..... தனிப்பட்ட முறையில் இது உங்களது கருத்து ..... ஒரு பிரதமராக அவர் சரியான முறையில் பதிலளித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். பிரதமரின் பதிலில் மேல்பூச்சு இருந்தாலும், ஒட்டுதல் இல்லை.. அதாவது பாலிஷ்ட் ஆக பேசியுள்ளார் ..... சரியான அணுகுமுறையே .....


R. SUKUMAR CHEZHIAN
செப் 07, 2025 05:06

அமெரிக்கா இனி நம்மிடம் சமாதானமாக போகவேண்டும் என்றால் சில தேவையான முக்கிய நிபந்தனைகளை வைக்க வேண்டும் 1 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை உடனடியாக நாம் மீட்டெடுக்க உதவவேண்டும் 2 ஐ.நா சபையில் வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர் ஆக்கவேண்டும் இதை உடனடியாக சில மாதங்களில் செய்து முடிக்க வேண்டும் 3 நம் நாடு செய்யும் ஏற்றுமதி இறக்குமதியில் 30% அல்லது சேவை துறையில் முழுமையாக நம் ரூபாய்யில் தின் வர்த்தகம் என்கிற மூன்று முக்கிய நிபந்தனைகள்ளுடன் மற்றும் அரசாங்கம் யோசித்து வைத்துள்ள மற்ற நிபந்தனைகளை சேத்து அமெரிக்காவிடம் சமாதானம் பேச வேண்டும் என்பது தான் நம் பாரத நாட்டின் 143 கோடி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஜெய் ஹிந்த்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை