உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!

சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ''சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது'' என 'வேவ்ஸ்' மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.மும்பையில் 'வேவ்ஸ்' உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் நடிகர்கள் மோகன்லால், ரஜினி, ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவை பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றி பெற்றுள்ளது. சினிமாவும், இசையும் உலகை இணைக்கிறது. திரைப்பட தயாரிப்பு, கேமிங், இசை உள்ளிட்டவற்றில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது.வேவ்ஸ் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும். இந்தியா அனிமேஷன் மற்றும் கிராபிக் துறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளாவிய சந்தையில் அனிமேஷன் துறையின் மதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று மும்பையில் 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒன்று கூடியுள்ளனர். இந்தியாவின் உணவு உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவின் இசையும் உலகம் முழுவதும் பிரபலமடையும் என்பது எனக்கு தெரியும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும். உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அஞ்சல் தலைகள் வெளியீடு!

மும்பையில் நடந்த மாநாட்டில், இந்திய சினிமாவின் 5 பிரபலங்களின் நினைவு அஞ்சல் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார். குரு தத், பி.பானுமதி, ராஜ் கோஸ்லா, ரித்விக் கட்டக், சலீல் சவுத்ரி ஆகிய 5 பேரின் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Padmasridharan
மே 02, 2025 05:12

ஓர் இந்தியா, ஓர் மொழி என்று சொல்ல யாரும் எத்தனிப்பதில்லை. ஏனென்றால் பொருளாதாரக் கொள்கை அதிகமாக்கி கொள்ள. சினிமாவுக்கும், இசைக்கும் மொழி இல்லாத பொழுது கல்வியில் கூட வாய் பேச முடியாதவர்களின் மாற்றுத் திறனாளிகளின் மொழியை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்


abdulrahim
மே 01, 2025 18:31

சினிமாவை பற்றி இவ்வளவு தூரம் அறிந்து பேச ஒரு மகா நடிகனால் மட்டுமே முடியும் .....


அப்பாவி
மே 01, 2025 18:18

கூத்தாடி தேசம்... அமெரிக்க ஜனாதிபதி கூட ஹாலிவுட்டைப் பாத்து இவ்ளோ பெருமிதப் பட்டிருக்கமாட்டார்


பாமரன்
மே 01, 2025 14:52

மகா நடிகன் சொன்னால் சரியாக தான் இருக்கும்... கடந்த பத்தாண்டுகளில் இவர் கட்டாத வேஷமா...


Raja k
மே 01, 2025 14:28

இதெல்லாம் ஒரு பெருமையா? சினிமாகாரன் ஆட்சியாளும் நாட்டில் இப்படிதான் பெருமை பேசிகனும்


Sivam
மே 01, 2025 13:26

அறிவியல் ஆராய்ச்சி முன்னேற வழி காணும். எப்பவும் இளைஞர்கள் கனவு வழக்கை வாழ சினிமா. எப்போது மீளுமோ என் இந்தியா?