உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மோடி அடிக்கல்

மும்பையில் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மோடி அடிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் ரூ. 29 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி இன்று (14.07.2024) மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வந்தார். அவருக்கு கோரேகானில் நெஸ்கோ மையத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் பின்னர் ரூ. 29 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் டெர்மினலை நாட்டு அர்ப்பணித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raj
ஜூலை 14, 2024 11:48

ஆமா தேர்தல் வருகிறதுலே


அபுசாமி
ஜூலை 14, 2024 11:46

அம்பானி வீட்டு கல்யாணத்துக்குப் போறதுக்கு இப்பிடி.ஒரு சாக்கு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை