உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காவிரி பிரச்சனை தீர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் :தேவகவுடா

காவிரி பிரச்சனை தீர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் :தேவகவுடா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பிரதமர் மோடியால் மட்டுமே காவிரி பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள மூத்த தலைவருமான தேவகவுடா தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி, ஒவ்வாரு ஆண்டும் காவிரியில் இருந்து கர்நாடகா நீர் திறந்து விட கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகம் மனு போடுகிறது. எங்களுக்கே தண்ணீர் இல்லை என தெரிவிக்கிறோம். நீர் திறந்து விடுமாறு தமிழகம் எங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த பிரச்னையில் எங்கள் மாநிலத்தில் உள்ள நீர்தேக்கங்களை ஒரு முறை கூட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வந்து ஆய்வு செய்யாதது வருத்தமளிக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=03ga3hsr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடியால் மட்டுமே காவிரி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியும். அதற்கு மீ்ண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும். காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேணடும்.நான் ராஜ்யசபா எம்.பி.யாக இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருப்பேன். அதுவரை கர்நாடகாவின் உரிமையை பாதுகாப்பேன். என் கடைசி மூச்சு உள்ளவரை காவிரி விவகாரத்தில் கர்நாடா நலனுக்காக பாடுபடுவேன். வரும் பிப்1-ம் தேதி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. இதில் எனது கருத்தை எடுத்துரைப்பேன். இவ்வாறு தேவகவுடா பேட்டியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ