மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
ஆமதாபாத்: கடந்த 20 ஆண்டுகளில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. கவர்னர் மூலமாக எனது ஆட்சியை முடக்கி வைக்க முயற்சிக்கிறது என நரேந்திர மோடி கூறினார். குஜராத் மாநிலத்தில் அரசை கலந்தாலோசிக்காமல் லோக்ஆயுக்தா நீதிபதி நியமனம் குறித்து விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மொக பேரணி நடத்தினார். குஜராத் மாநிலத்தில் கடந்த வாரம், அமைதி நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்தார். இவரது உண்ணாவிரத்திற்கு தமிழக முதல்வர் உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கவர்னர் நியமித்த லோக்ஆயுக்தா நீதிபதி மேத்தா விவகாரம் தொடர்பாக ஆமதாபாத் நகரில் உள்ள வஸ்த்ரோல் நகரில் , அரசுக்கு எதிரான அநீதி என்ற பெயரில் இந்த மெகா பேரணி துவங்கியது.பேரணியை மோடிதுவக்கி வைத்து பேசியதாவது: கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. மத்தியில் தொடர்ந்து இரு முறை ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட கவர்னர் மூலமாக ஆட்சியை பிடிக்கவும் , அரசுக்கு நெருக்கடி தர முயல்கிறது. கவர்னர் மூலமாக குஜராத்தில் ஆட்சியை முடக்கிவைக்க முயற்சி செய்கிறது. இதற்கு லோக்ஆயுக்தாவை கையில் எடுத்துள்ளது. கவர்னர் பதவி என்பது மிகவும் கவுரவமிக்கது. அப்பதவியின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டுமே தவிர அதனைதவறாக பயன்படுத்துவது சரியல்ல என்றார். முன்னதாக பேரணியில் பா.ஜ. முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.மூத்ததலைவர் அத்வானி கலந்து கொள்ளவில்லை.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago