உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தி சபர்மதி ரிப்போர்ட் படம் அமைச்சர்களுடன் பார்த்த மோடி

தி சபர்மதி ரிப்போர்ட் படம் அமைச்சர்களுடன் பார்த்த மோடி

புதுடில்லி:குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, தி சபர்மதி ரிப்போர்ட் என்ற பாலிவுட் திரைப்படத்தை, பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடன் இணைந்து நேற்று பார்த்தார்.மிர்சாபூர் உள்ளிட்ட திரைப்படங்களின் வாயிலாக புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாசே நடிப்பில், தீரஜ் சர்ணா இயக்கிய, தி சபர்மதி ரிப்போர்ட் திரைப்படம் கடந்த மாதம் 15ம் தேதி வெளியானது. இது, கடந்த 2002ம் ஆண்டில் குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தின் டீசரை, சமூக வலைதளத்தில் சமீபத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி தன் பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தி சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்தை, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் பிரதமர் மோடி நேற்று பார்த்தார். அவருடன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், அஸ்வினி வைஷ்ணவ், கிரண் ரிஜிஜு இணைந்து இந்த திரைப்படத்தை பார்த்தனர்.இந்த திரைப்படத்தை பார்த்தபின் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி, 'திரைப்படத்தை தயாரித்த படக்குழுவினரின் முயற்சிக்கு பாராட்டுகள்' என, பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜிதேந்திரா கூறுகையில், “பிரதமராக பதவியேற்ற பின், தான் பார்த்த முதல் திரைப்படம் இது என, பிரதமர் மோடி தெரிவித்தது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,” என்றார். தி சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்துக்கு, பா.ஜ., ஆளும் உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா, ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் வரிவிலக்கு அளித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

AMLA ASOKAN
டிச 03, 2024 19:12

சபர்மதி ரயிலில் இறந்தவர்கள் 58 . கோத்ரா படுகொலையில் இறந்தவர்கள் 2000 , கற்பழிக்கப்பட்டவர்கள் , விரட்டியடிக்கப்பட்டவர்கள் , காணாமல் போனவர்கள் பல ஆயிரம் . இன்றும் அந்த ரயில் பயணம் கோத்ராவை கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறது . மக்கள் மனதில் சரித்திர சம்பவங்கள் நீடிக்கவேண்டும் என்பது தான் இந்த படத்தின் நோக்கம்


Barakat Ali
டிச 03, 2024 14:52

காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணிகள் ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு இல்லீங்களா ??


Barakat Ali
டிச 03, 2024 14:51

தவறான செயல்கள் தவறான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன ..... பழிக்குப்பழி என்று இறங்கினால் யாரும் நிம்மதியாக வாழ முடியாது .....


sribalajitraders
டிச 03, 2024 14:08

குஜராத் கள்வரத்தையும் பாருங்கள் மோடி


பாமரன்
டிச 03, 2024 11:09

சத்தத்தையே காணோம்.. ??


AMLA ASOKAN
டிச 03, 2024 09:43

பார்லிமெண்ட் இயங்காமல் உள்ளது என்பதை விட, மக்கள் பிரச்சினைகளை விட அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


M Ramachandran
டிச 03, 2024 09:37

இத்தாலி குடும்பத்தையும் ப.சி யையும் மற்றுமுள்ள ஜாலராகளையும் உட்கார வைத்து பார்க்க சொல்லி இருக்கலாம்


J.V. Iyer
டிச 03, 2024 05:07

நல்ல படங்களை தமிழகத்தில் பார்க்க வாய்ப்புண்டா?


புதிய வீடியோ