உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடியே பிரதமராக நீடிப்பார்: கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி

அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடியே பிரதமராக நீடிப்பார்: கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நரேந்திர மோடியே பிரதமர் ஆக நீடிப்பார்'', என டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

கெஜ்ரிவால் கேள்வி

டில்லியில் இன்று ( மே 11) நிருபர்களை சந்தித்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், ‛இண்டியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என கேட்கின்றனர். பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என நான் அக்கட்சியிடம் கேட்கிறேன். பிரதமர் மோடிக்கு வரும் செப்., 17 அன்றுடன் 75 வயதாகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8c6mypbd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ.,வில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியை அவர் வகுத்துள்ளார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். தற்போது பிரதமருக்கு 75 வயது ஆகப் போகிறது. மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தால், முதலில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவியில் இருந்து இறக்குவார்கள். பிறகு அமித்ஷா பிரதமராக பதவியேற்பார். அமித்ஷாவுக்காக பிரதமர் ஓட்டு கேட்கிறார். மோடியின் கியாரன்டிகளை அமித்ஷா நிறைவேற்றுவாரா என கேள்வி எழுப்பி இருந்தார்.

விதி ஏதும் இல்லை

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: நாட்டில் அனைத்து பகுதி மக்களும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக நிற்கின்றனர். பா.ஜ.,400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு நன்கு தெரியும். இதனால் தான் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். 75 வயதுக்கு மேல் ஓய்வு என்ற விதி பா.ஜ.,வில் இல்லை. 2029 வரை மோடியை நாட்டை வழிநடத்துவார். வரும் தேர்தலிலும் வழிநடத்துவார். இண்டியா கூட்டணிக்கு நல்ல செய்தி எதுவும் கிடைக்கவில்லை. பொய் பரப்பி அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.

இடைக்கால ஜாமின்

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளது. தான் கைது செய்யப்பட்டது தவறு என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வேண்டினார். ஆனால், அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமின் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்த நாள் அவர் விசாரணை அமைப்புகளிடம் சரண் அடைய வேண்டும். தனக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதாக கெஜ்ரிவால் நினைத்துக் கொண்டால், சட்டத்தை பற்றிய புரிதல் அவருக்கு இல்லை.

காங்.,க்கு கண்டனம்

இன்று திருப்தி படுத்தும் அரசியலின் உச்சத்தை காங்கிரஸ் செய்து வருகிறது. பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உள்ளது எனக்கூறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பணயம் வைக்கும் செயலை அக்கட்சியின் ஆதரவாளர்களான மணிசங்கர் அய்யர் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் செய்கின்றனர். அவர்களுக்கு நான் எனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டதால் பொய்களை பரப்பி வருகின்றனர். இவ்வாறு அமித்ஷா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Easwar Kamal
மே 13, 2024 16:44

நாங்க நம்பிட்டோம்


Velan Iyengaar
மே 12, 2024 18:09

அப்போ ஊருக்கு ஒரு நியாயம் ஆனா அம்பத்தையாறு இஞ்சுக்காரருக்கு ஒரு நியாயமா ?? அப்போ இதே மாதிரி வேற வேற மாதிரி நியாயத்தை தான் வேற எல்லா பஞ்சாயத்துக்கு செய்வானுங்களா ?? அது சரியா மக்களே ??? அப்போ இவனுங்க கொள்கை நீதி விதி நேர்மை வரையறை கட்டுப்பாடு பழக்கம் வழக்கம் வழக்கம் தான் என்ன ?? நீ ஆளை காட்டு மீதி விஷயத்தை நான் காட்டுகிறேன் தானா ?? அடப்பாவிகளா உறுபடுவீங்களா ??? விளங்குவீங்களா ?? நல்ல கதி அடைவீர்களா ??? நாடு உருப்படுமா ?? விளங்குமா ?? ஒரு கட்டுபாடு இருக்குமா ???


ஆரூர் ரங்
மே 12, 2024 10:31

யாரைத் தலைவராக தேர்ந்தெடுப்பது, என்ன தகுதிகள் என்பதெல்லாம் அந்தந்தக் கட்சி உறுப்பினர்கள் தீர்மானிக்கும் விஷயம். மற்றவர்கள் அதனைப் பற்றி அபிப்பிராயம் கூறக்கூடாது. மெஜாரிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த நேதாஜி, காங்கிரசின் தலைவராக ஆகமுடியவில்லை. ஆனால் எந்த ஒரு பிரதேச காங்கிரஸ் கமிட்டியும் ஆதரிக்காத நேரு பிரதமராக ஆக்கப்பட்டார். இந்நிலை பிஜெபி யில் இல்லை.


Velan Iyengaar
மே 12, 2024 18:26

கிட்டத்தட்ட அதே நிலை இப்போது குஜராத் கட்டுப்பாட்டுக்குள் ஜல்சா கட்சி சிக்கி சின்னாபின்னமாகுது அந்த கும்பல் நேர்மையான வழிமுறையை பின்பற்றாமல் நாட்டின் பிற ப்ரதேச தலைவர்களை ஒடுக்கும் செயலை செய்து வருது அந்த இரட்டையர் கும்பல் நாட்டை அதி பயங்கர அபாயத்தில் தள்ளுவதை பின்னிருந்து ஆட்டுவிக்கும் நாக்பூர் தலைமை உணரவில்லை என்றால் அது இரு அமைப்புக்கும் கேடு மட்டுமே விளைவிக்கும் நாட்டை சர்வநாசத்தில் தள்ளிவிடும்


PREM KUMAR K R
மே 12, 2024 08:05

எதிர்கட்சி தலைவர்களின் பேச்சுக்களில் கண்ணியம் இல்லாமல் போனதால் தேர்தல் பிரசாரம் முக்கியப் பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் திசைமாறி போவதை பார்க்கிறேன். அவர்களின் முக்கிய நோக்கமே பிரதமரை மிகவும் எரிச்சலடைய செய்வதன் மூலம் அவர் தனது பொறுமையை இழந்து அவர்களது பாணியிலேயே பதிலளிக்கும் நிலைக்கு அவரை கீழே கொண்டு வர வேண்டும் என்பது மட்டுமே. எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பும் அனைத்து மோசமான பிரச்சினைகள் ஒவ்வொன்றிற்கும் பிரதமர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என மற்ற மோடி விசுவாசிகளை போல் நானும் கருதுகிறேன், ஏனெனில் இவை அனைத்தும் ஆரோக்கிய மற்ற பாதையில் அவரை அழைத்து செல்கின்றன, மேலும் இது போன்ற பேச்சுகளை நானும் மற்ற மோடி ஆதரவாளர்களை போல் முற்றிலும் வெறுக்கிறேன். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வளர்ச்சி பணிகளில் நாடு அடைந்த முன்னேற்றத்தையும் வெற்றியை பற்றியுமே வாக்காளர்களுக்கு எடுத்துரைப்பதில் பிரதமர் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். தேர்தல் நடக்க இருக்கும் மீதமுள்ள தொகுதிகள் பெரும்பாலும் வடக்குப் பிராந்தியத்தில் இருப்பதாலும், அவை அனைத்தும் பாஜக வெற்றி பெற்ற - வெற்றி பெற வேண்டிய மிக முக்கியமான தொகுதிகள் என்பதாலும், எஞ்சியிருக்கும் தொகுதிகளின் பிரச்சாரத்தில் இதை அவர் கவனத்தில் கொள்வார் என்று நான் நம்புகிறேன்.


Velan Iyengaar
மே 12, 2024 18:14

அந்த வளர்ச்சியை சொல்லி வாக்கு சேகரிப்பதை யாரு தடுத்தார்கள் ?? இந்த கேடுகெட்ட கும்பல் பத்து வருட முன்ன கணக்கை தானே சொல்லுது ??? அது மட்டுமா?? மறுபடி மறுபடி ராமர் கோவில் முஸ்லீம் பாகிஸ்தான் இதை ஆணே இந்த ஆசாமிகள் சொல்லி வாக்கு சேகரிக்கிறார்கள் ?? உமக்கே நியாயமா இருக்கா ?? சாதனை சொல்லி வாக்கு கேட்டால் அது சரி அல்லது தவறு என்று மாற்று கட்சியினர் பிரச்சார பாணி இருக்கும் சாதனையை சொல்லாமல் கேடுகெட்டவனுங்க மறுபடி மறுபடி ராமர் கோவில் மற்றும் முஸ்லீம் பற்றி மட்டும் பேசினால் எதிர்க்கட்சி ஆட்கள் என்ன தான் செய்வார்கள் ???


K.n. Dhasarathan
மே 11, 2024 21:24

அப்போ நீங்களே சட்டம் போடுவீங்க அப்புறம் நீங்களே அதை மதிக்க மாட்டீங்க அப்படித்தானே ? வயது உச்ச வரம்பு யார் கொண்டு வந்தது ? மோதிலால் நேரு ? ஜவாஹர்லால் நேரு ? இந்திரா காந்தி ? சாட்சாத் நீங்க தானையா? அப்புறம் எப்படி மோடி வர முடியும் ? சட்டம் அதை கொண்டுவருபவரிடம் கேட்குமா? சட்டம் படும் பாடு இருக்கே படு மோசம் ? இந்தியாவின் நிலைமை இப்படி ஆகணுமா? கடவுள்தான் காப்பாத்தணும்


ஆரூர் ரங்
மே 11, 2024 22:35

அரசியல் சட்டத்திலும் SCST ஒதுக்கீடு புத்தாண்டுகளுக்கு மட்டுமே என்று இருந்தது அதனை இப்போது 80 ஆண்டு வரை நீடித்துள்ளோமல்லவா? சில மாற்றங்கள் மாறிக்கொணாடுதான் இருக்கும். மோதியை பிரதமர் வேட்பாளராக கட்சிதான் முடிவு செய்தது. அதை அத்வானி எதிர்க்கவில்லை. வயது மட்டுமே காரணமல்ல .


R Kay
மே 12, 2024 00:24

கொள்ளைக்கூட்டத்தின் கதறல் காதுக்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது எப்படியாவது மோடிக்கு கட்சிக்குள் போட்டி ஏற்படுத்தி கலகம் செய்து குளிர் காய முடியுமா என ஆலாய் பறக்கின்றனர் குடும்ப கொத்தடிமைகள் ஐயோ பாவம் இந்தியாவின் நிலைமை எல்லாம் சூப்பராகத்தானிருக்கிறது உங்கள் அண்டை தேசம்தான் பாவம் பிச்சை பாத்திரம் ஏந்திக்கொண்டிருக்கிறது


Gopal,Sendurai
மே 12, 2024 12:27

அறிவாலய அடிமையே இத்தனை நாள் யார் காப்பாற்றியது


Velan Iyengaar
மே 11, 2024 21:17

விதி வலியது எதை நாம் அடுத்தவர் மீதி வீசுகிறோமோ அது நம்மை நோக்கி சர்வ நிச்சயம் திரும்பி வரும் அற்புதமான கேள்வியை மக்கள் முன்வைத்து பிரச்சாரத்தின் போக்கை திசை திருப்பிய அரவிந்த் கெஜ்ரிவாலை தலை வணங்குகிறேன்


Nagendran,Erode
மே 12, 2024 12:28

ரொம்ப குனிஞ்சு செவத்துல முட்டிக்கிறாத...


kesavan vasu
மே 11, 2024 21:16

NEXT PRIME MINISTER OF INDIA MR.RAGUL JI ONLY


rao
மே 12, 2024 08:46

in dreams, if possible in porkistan.


DARMHAR/ D.M.Reddy
மே 13, 2024 01:15

திரு மோடி அவர்களே இந்திய நாட்டின் பிரதமராக பணியாற்றினால்இந்திய மக்களுக்கு நன்மைகள் பெருகும்


Velan Iyengaar
மே 11, 2024 21:00

விதி ஏதும்இல்லையெனில் முரளிமனோஹர் ஜோஷி , அத்வானி மற்றும் வெங்கய்ய நாயுடு வை எல்லாம் என்ன சொல்லி ஏமாற்றினீர்கள் ?? அத்வானியை பாவம் ஜனாதிபதியாக்க கூட விடாமல் என்ன மாதிரி கேடுகெட்ட அரசியல் செய்து அந்த தலைவரின் உழைப்பை உறிஞ்சினீர்கள் ??? அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரத்தின் போக்கையே மாற்றி விட்டு விட்டார்.மோடி வெறும் மாற்று வேட்பாளரா ??


P VENKATESH
மே 11, 2024 22:16

நீ எப்போ தொடப்ப கட்டைக்கு மாறினே டெல்லி கரண் பெரிய யோக்கியன் கிடையாது அவனும் திராவிடநும் ஒன்னுதான்ப்பா


R Kay
மே 12, 2024 00:25

ஹவாலா புனை பெயரில் என்னமாய் கூவுகிறது


R Kay
மே 12, 2024 00:27

நீங்கள்தான் பாஜகவை சார்ந்ததில்லையே அக்கட்சிக்குள் என்ன நிகழ்ந்தால் உங்களுக்கு எங்கே வலிக்கிறது? குறைந்தபட்சம் பரம்பரை ஆட்சி நடக்கவில்லையே கட்சியின் கட்டுப்பாடு, சொத்துக்கள் அனைத்தும் ஒரு கொள்ளைக்கூட்டத்திடம் சிக்கி சின்னாபின்னமாகவில்லையே


ஆரூர் ரங்
மே 11, 2024 20:08

எண்பதைத் தாண்டியிருந்த மொரார்ஜி அவர்களையே வாஜ்பாய் ஆட்வானி பிரதமராக ஏற்றிருந்தார்கள். சராசரி ஆயுள் அறுபதாக இருந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் 75 வயதை நிர்ணயித்தது. இப்போதும் நாற்பது வயது இளைஞனின் உடல் நலம் , பலத்துடனிருக்கும் மோதி அவ‌ர்களு‌க்கு அது பொருந்தாது.


Velan Iyengaar
மே 11, 2024 21:10

எப்படி பொருந்தாது ?? அத்வானி தீவிரமாக bjp கட்சியை வளர்த்தெடுக்க நாடு முழுதும் ரதயாத்திரை செய்தபோது நான்காம் நிலை ஆசாமி அத்வானிக்கு மைக்கு பிடித்து ரயில் பெட்டி வாசல் முன்னாடி தொத்திக்கொண்டு நின்ற காரணத்தால் பொருந்தாதா ???


Velan Iyengaar
மே 12, 2024 17:44

விதி அனைவருக்கும் பொருந்தும் தானே ?? அப்போ திருவாளர் ஐம்பத்தி ஆறு இஞ்சு மார்புக்காரன் வெறும் மாற்று வேட்பாளரா ??? ஹி ஹி அப்போ இவனுங்க கொடுத்த அத்தனை க்யாரண்டீ விளம்பரம் எல்லாம் அப்பட்டமான ஏமாற்று விளம்பரமா ?? இதை தான் மோடிமஸ்தான் வித்தை என்பார்களா ???


Ramesh Sargam
மே 11, 2024 19:57

அடுத்த ஐந்து ஆண்டும் எதிர்க்கட்சியினர், கெஜ்ரிவால் உட்பட வாலை சுருட்டிக்கொண்டு, ஊழல் எதுவும் செய்யாமல் இருக்கவேண்டும் இல்லையென்றால் திஹார் சிறைதான்


மேலும் செய்திகள்