உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியின் ஆர்.எஸ்.எஸ்., விசிட்

மோடியின் ஆர்.எஸ்.எஸ்., விசிட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி, நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்திற்கு, வரும் 30ல் செல்கிறார். இங்குதான், சமீபத்தில் மத கலவரம் வெடித்தது. கடந்த 2014ல் பா.ஜ., வெற்றி பெற்று, மோடி பிரதமரான பின், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்திற்கு சென்றதே இல்லை. ஆனால், பிரதமர் ஆவதற்கு முன், நாக்பூர் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்றுள்ளார். 'பா.ஜ.,வை இயக்கும், ஆர்.எஸ்.எஸ்., நாக்பூர் அலுவலகத்திற்கு ஏன் மோடி போகவில்லை?' என, அப்போது கேள்விகள் எழுப்பப்பட்டன.தற்போதைய பயணத்தின்போது, 'மாதவ் நேத்ராலயா' என்ற கண் பரிசோதனை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப் போகிறார் மோடி. இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.'அப்போது, முக்கியமான பெரிய அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார்' என, பலரும் எதிர்பார்க்கின்றனர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், நாக்பூரின் ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்திற்கு வந்துள்ளார்.மோடியின் இந்த, 'விசிட்' குறித்து இன்னொரு விஷயமும், டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது. பா.ஜ.,வின் அடுத்த தேசிய தலைவர் யார் என்பதை மோகன் பகவத், பிரதமர் உட்பட மற்ற தலைவர்களும் முடிவு செய்வர் என, சொல்லப்படுகிறது. தற்போது தலைவராக உள்ள நட்டாவின் பதவிக்காலம் முடிந்து விட்டது; அடுத்த தலைவர் யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், மோடியின் நாக்பூர் பயணம் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
மார் 23, 2025 18:25

RSS என்பது இந்திய அமைப்பு இந்தியாவிற்காக. காங்கிரஸ் முதல் திமுக இந்திய அமைப்பு பாகிஸ்தானுக்காக முஸ்லீம் மக்களுக்காக ஆகவே மோடி செய்ததில் ஒரு தவறும் இல்லை


V.Mohan
மார் 23, 2025 11:03

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனக் கூறப்படும் ஸ்டாலின் செய்யும் கூத்துக்களையும், அபத்த களஞ்சிய பேச்சுக்களையும் பைபிள் வார்த்தைகளாகவும், வாசகங்களாகவும் விடியல் அடிவருடிகள் போற்றலாம். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி அவர்கள் நியாயமாகவும், பொருத்தமாகவும், தேச நன்மை குறித்து அப்பழுக்கற்ற மனிதனாக பேசுவது, விடியல் அடிவருடிகளுக்கு உடம்பெல்லாம் எரிகிறது. அதனால் நேர்மையற்ற மனிதாபிமானமற்ற முறையில் அழுக்கான, நியாயமற்ற கமெண்டுகளை போடுவதில் இருந்து அவர்களின் கையாலாகாத ஆத்திரம் தெரிகிறது.


கிஜன்
மார் 23, 2025 08:23

மோகன் யாதவை அடுத்த தலைவராக நியமித்ததால்.... கோனார் ஓட்டுக்கள் கிடைக்கும் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை