உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு: காங்கிரஸ் கண்டனம்

ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு: காங்கிரஸ் கண்டனம்

புதுடில்லி: நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூறியதாக பிரதமர் மோடி பேசியிருந்தார். இதற்கு காங்., கண்டனம் தெரிவித்தது.ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூறினார்கள். காங்., ஆட்சிக்கு வந்தால் நமது சொத்துகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு கொடுக்கப்படும். நகர்ப்புற நக்சல் சிந்தனை, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலிகளைக்கூட விட்டுவைக்காது'' எனப் பேசியிருந்தார். காங்கிரஸ் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என சொன்னதில்லை, பிரதமர் பொய் சொல்வதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z94mfh9k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், 'எந்த பிரதமரும் மோடியை போன்று தரம் தாழ்ந்து பேசியதில்லை. இதற்கு தேர்தல் ஆணையமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார். காங்., எம்.பி., ராகுல், ''முதல் கட்ட ஓட்டுப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்களின் அளவு அதிகரித்துள்ளது. பயத்தின் காரணமாக, அவர் பொதுமக்களை திசைத் திருப்புகிறார்'' என்றார். காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ''பிரதமர் மோடி துளியும் கூச்சமின்றி பொய் பேசுகிறார்'' என விமர்சித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Cheran Perumal
ஏப் 24, 2024 19:36

நீங்கள் நடுநிலையாளராக இருந்தால் மன்மோகன்சிங் அப்படி பேசினார் என்பதற்கு ஆதாரம் உள்ளது என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்


ராமகிருஷ்ணன்
ஏப் 23, 2024 03:20

காங்கிரஸ் ஆட்சி ஒளரங்கசீப் ஆட்சி என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்


Rpalnivelu
ஏப் 22, 2024 20:42

உண்மை


Rpalnivelu
ஏப் 22, 2024 20:39

ஏம்பா இருநூறு ரூவா உன் சந்ததியரை பற்றி ஒனக்கு கொஞ்சம் கூட கவலையிலியா? உன்னைப் போலவே உன் குடும்பமும் உருப்பட கூடாதா?


Godfather_Senior
ஏப் 22, 2024 20:28

அடேங்கப்பா உங்கள் மௌன மோகன் சிங் தான் இதை நிச்சயமாக கூறினார் என்பதற்கு ஆதாரங்கள் நிறையவே உள்ளன மோடி பொய் சொல்லவில்லை, நாளை அந்த ஆதாரங்கள் மிக வேகமா வைரலாகும்


tamilan
ஏப் 22, 2024 17:34

திருமணம் முடிந்தவர்கள் , குழந்தை பெற்றவர்கள் , பிஜேபிக்கு வாக்கு அளிக்காதீர்கள்


Raa
ஏப் 22, 2024 17:25

விவரம் தெரியாதவர்கள், திருச்சியை அடுத்த ஏரியாவில் ஒரு வருடம் முன் ஒரு விவசாய தன நிலத்தை விற்கப்போகும் போது பதிவாளர், இந்த ஊர் முழுவதும் வக்கு போர்டுக்கு சொந்தம், ஆகையால் விக்க முடியாது என்று சொல்லி, அனைவரும் போராடி தடை வாங்கிய செய்தியையும் சேர்த்து படிக்கவும்


enkeyem
ஏப் 22, 2024 16:11

சும்மா முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டாம் மூர்க்கனே நாட்டின் வளங்கள் அனைத்துக்கும் முஸ்லிம்களுக்குத்தான் முழு உரிமை என்று சொன்னது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்


kulandai kannan
ஏப் 22, 2024 15:38

வருமானத்தையும் சொத்துக்களையும் பகிர்ந்தளிப்போம் என்று உளறிய ராகுல், எப்படி செய்வோம் என்று விளக்கவேண்டும்.


tamilan
ஏப் 22, 2024 15:37

அதிகம் குழந்தை உள்ளவர்கள் பிஜேபிக்கு வாக்கு அளிக்காதீர்கள் என்று சொல்லமுடியுமா


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ