நம் நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர்கள் பொது பிம்பம், கொள்கைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள், செயல்பாடுகள் மூலம் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்துள்ளனர். ஆனால், அவர்களை காட்டிலும் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து திறன்களிலும் தனித்துவமாக திகழ்கிறார். 'மோடி முத்திரை' என்ற கொள்கையை கடைப்பிடித்து, அவர் வீறுநடை போடுகிறார். கடந்த, 25 ஆண்டுகளாக அரசு தலைமை பதவியில் வீற்றிருக்கும் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் சமூக ஊடகங்களால் பல மடங்கு பெரிதாக பரப்பப்படுகிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம். .. உடை முன்னாள் பிரதமர் நேருவுக்கு, 'கோட்' என்பது பிரிக்க முடியாத ஒன்று; கோட்டின் பாக்கெட்டில், 'ரோஜா' மலர் எப்போதுமே இருக்கும். ஆனால் அவரது கோட், ஒருசில உயர்மட்ட வர்க்கத்தினருக்கு மட்டுமே உரியதாக இருந்தது. உடை விவகாரத்தில், பிரதமர் மோடி எப்போதும் தனித்துவமாக உள்ளார். அவர் அணியும் ஆடைகள் உலகளவில் பிரபலமானவை. பிரதமர் மோடி அணியும் கோட், நீளம், வடிவம், வண்ணங்கள் என, பல அம்சங்களை கொண்டது. இது, நடுத்தர வர்க்கத்தினரிடையே மிகவும் பிரபலம். வணிக உத்தி பிரதமர் மோடி 'மார்க்கெட்டிங்' நுணுக்கத்தை நன்று கற்றுக் கொண்டவர் என்பது, சந்தையில், 'நரேந்திர மோடி' பெயரில் பல்வேறு வர்த்தகப் பொருட்கள் வருவதிலிருந்து தெளிவாகிறது. உதாரணமாக, 'நமோ ஸ்டோர், நமோ மந்திரா, நமோ டெக்' என்ற பிரிவுகளில் மோடி டி - -சர்ட், தேநீர் கோப்பை, எழுது பொருட்கள், பென் டிரைவ் போன்றவை கிடைக்கின்றன. கதை சொல்லும் கலை அரசியல் தலைவர்கள் மேடையில் உரையாற்றுவது வழக்கம். ஆனால், கதை சொல்லும் பாணியில் தனிச் சிறப்புடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். செய்தியை பரப்ப, வானொலியை ஒரு முக்கிய ஊடகமாக அவர் பயன்படுத்துகிறார். முன்னாள் பிரதமர்கள் போல் அல்லாமல், வானொலியில், 'மன் கீ பாத்' எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதுவரை, 126 அத்தியாயங்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியை, ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர். சொல்லாற்றல் பிரதமர் மோடி பேசுவதில் மட்டுமல்ல, எழுதுவதிலும் திறன் கொண்டவர். கொள்கைகள் முதல் அஞ்சலிகள் வரை பலதரப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகளையும், தலையங்கங்களையும் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். அவை, நாடு முழுதும் ஆயிரக் கணக்கான நாளிதழ்களில் வெவ்வேறு மொழிகளி ல் பிரசுரமாகின்றன. பெண் சக்தி நாட்டில் ஜாதியை மையமாக வைத்து தேர்தல்கள் நடந்த நிலையில், பெண்களை தனி ஓட்டு வங்கியாக மாற்றி, அந்தப் போக்கையே பிரதமர் மோடி மாற்றி அமைத்துள்ளார். 'உஜ்வாலா யோஜனா, லட்சாதிபதி சகோதரியர்' போன்ற திட்டங்கள் மூலம், அவர் இதை சாதித்துள்ளார். ஹரியானாவில் 'லாடோ லட்சுமி' மற்றும் ம.பி.,யில் 'லாட்லி பெஹ்னா' போன்ற திட்டங்கள் மூலம் பெண்களை பா.ஜ., கவர்ந்துள்ளது. சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, நிதி, தலைமைத்துவம் என, பல்வேறு துறைகளில் பெண்ககளுக்கு அதிகாரமளிக்கும் கொள்கைகளை அவர் கொ ண்டு வந்துள்ளார். இது, சமீபத்திய தேர்தல்களில் பெண்கள் அதிகளவில் ஓட்டளிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றுவதால், 'ஹிந்துக்களின் இதய சக்கரவர்த்தி' என, பிரதமர் மோடியை ஹிந்துக்கள் அன்போடு அழைக்கின்றனர். பிரதம ர் மோடி எனும் பிராண்டு உத்தியானது, செய்தியில் தெளிவு, நம்பிக்கை கட்டியெழுப்புவதில் நிலைத்தன்மை, கதை சொல்லும் திறன், அடித்தட்டு மக்களையும், உலகளாவிய பார்வையாளர்களையும் ஈர்க்கும் டிஜிட்டல் கருவிகள், எதிர்க்கட்சிகளை பலவீனப் படுத்துத ல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் சுவாரசியம் என்னவென்றால், சொந்த கட்சியான பா.ஜ., எனும் பிராண்டை விட, அவரது தனிப்பட்ட பிராண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014 முதல், பா.ஜ.,-வுக்கு வெற்றியை தேடித் தரக்கூடிய ஒரே முதன்மை தேர்தல் நட்சத்திர பேச்சாளராக, பிரதமர் மோடி மட்டுமே உள்ளார். அரசியல் வர்க்கத்தினரையும், பிராண்டு உருவாக்குபவர்களையும் தொடர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு சக்தியாக, 'மோடி பிராண்டு' நிலைபெற்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை. - நமது சிறப்பு நிருபர் -