உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சந்தேகங்களை பொய்யாக்கி வளர்ச்சி பாதையில் செல்கிறது இந்தியா: மோகன் பகவத் பேச்சு

சந்தேகங்களை பொய்யாக்கி வளர்ச்சி பாதையில் செல்கிறது இந்தியா: மோகன் பகவத் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:'' அனைவரின் கணிப்புகளை பொய்யாக்கி, இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறி செல்கிறது,'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மோகன் பகவத் பேசியதாவது: 3 ஆயிரம் ஆண்டுகளாக உலகத்திற்கு தலைமை ஏற்று இந்தியா வழி நடத்திய போது எங்கும் மோதல் நடக்கவில்லை. உலகில் தற்போது நடக்கும் அனைத்து மோதல்களுக்கும் சுயநலனே காரணம். இது அனைத்து பிரச்னைகளையும் உருவாக்குகிறது.பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்தியா முன்னேறாது. பிரிந்து போகும் எனக்கூறினார். ஆனால், அது நடக்கவில்லை. தற்போது, பிரிட்டன் தான் பிரிவினையின் முனையில் நிற்கிறது. நாம் பிரிய மாட்டோம். நாம் முன்னேறி செல்வோம். ஒரு முறை நாம் பிரிக்கப்பட்டோம். ஆனால், நாம் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டோம்.நம்பிக்கை அடிப்படையில் உலகம் இயங்கும் போது, செயல் ஆற்றல் கொண்ட மனிதர்களை கொண்ட நம்பிக்கையின் பூமியாக பாரதம் உள்ளது.வாழ்க்கை என்ற மேடையில் நாம் நடிகர்களாக இருக்கிறோம். நாம் நமது கதாபாத்திரங்களை நடிக்க வேண்டும். நாடகம் முடியும் போது உண்மையான சுயம் வெளிப்படும். பாரதத்தில் நிலவும் நம்பிக்கை அறிவு மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

baala
செப் 15, 2025 12:30

பொய்யாய்


pmsamy
செப் 15, 2025 07:07

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அழியும் வரை இந்தியாவில் கெடுதல்தான்


SUBBU,MADURAI
செப் 15, 2025 07:47

நூறாண்டுகளுக்கு மேலாக RSS இயக்கம் மென்மேலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உன்னைப் போன்ற துரோகப் புல்லுருவிகளை அழித்து ஒழிக்கும் வரை அந்த இயக்கம் ஓயாது.


N Sasikumar Yadhav
செப் 15, 2025 09:55

உன்னுடைய மானங்கெட்ட மதமாற்ற வியாபாரம் குண்டு வெடிப்பு வியாபாரம் செய்ய முடியாத கோபத்தில் புலம்பாதீர். பாரத நாடு 2035 ல் உன்னய மாதிரியான தேசதுரோக கும்பலுங்களை உள்ளடக்கியும் நம்பர் 1 பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கும் உலக வல்லரசாக நல்லரசாக இருக்கும் இவை அனைத்தும் ஆர்எஸ்எஸின் குழந்தையான பாரதியஜனதா தலைமையிலான ஆட்சியில் நடக்கும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 15, 2025 10:06

என்ன கெடுதல் இதுவரை நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தொழிலாளர் நல சட்டபடி குறைந்த பட்ச சம்பளம் 2014 ல் ரூபாய் ஐந்தாயிரம். இன்று குறைந்த பட்ச சம்பளம் தொழிலாளர்கள் நல சட்டபடி ரூபாய் 18000. அன்று பென்ஷன் தொகை கூட சரியாக கொடுக்க முடியாத நிலை. இன்று மகளிர் உரிமைத் தொகை என்று ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டு கொண்டு ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை தருகிறது. எப்படி இது சாத்தியம் மத்திய பாஜக அரசின் சீரிய வளர்ச்சி திட்டங்களால் பொருளாதார நிலமை உயர்ந்ததால் தான் சாத்தியமானது. இது கெடுதலா. ஸ்டாலின் ஒரு டிரில்லியன் டாலர் என்று பேசுகிறார் என்றால் பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக தானே பேசுகிறார். காங்கிரஸ் இலக்கு எதுவும் நிர்ணயிக்ககாமல் தான் தோன்றி தனமாக ஆட்சி செய்தது. நேரு ஐந்தாண்டு திட்டம் என்று ஒவ்வொரு ஐந்தாண்டுகள் கழித்து திட்டம் போடுவார். ஆனால் இது வரை ஒரு ஐந்தாண்டு திட்டம் கூட முழுமையாக முடித்தது இல்லை. முடித்த திட்டங்களும் காலங்கடந்து பெரும் பொருட்செலவில் முடிக்கப்பட்டது.


Mettai* Tamil
செப் 15, 2025 10:12

ஊழல் திமுக மற்றும் காங்கிரஸ் அழியும் வரை இந்தியாவில் கெடுதல்தான்.. இரண்டையும் களை எடுப்பது பாஜக வின் கையில் தான் உள்ளது .....


அப்பாவி
செப் 15, 2025 06:34

நல்லா நடிக்கிறாரு...


ManiMurugan Murugan
செப் 14, 2025 22:28

அருமை


Oviya Vijay
செப் 14, 2025 22:26

ஆர்எஸ்எஸ் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் வேகமாக வளர்ந்திருக்கும்...


SUBBU,MADURAI
செப் 15, 2025 07:52

உன்னைப் போன்றவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள் கொடுத்த அப்பத்துக்கு ஆசைப்பட்டு மதம் மாறாமல் இருந்திருந்தால் பாரதம் இன்னும் வேகமாக வளர்ந்து இருக்கும். இனிமேலாவது கருத்தை ஜாக்கிரதையாக பதிவிடு...


vivek
செப் 15, 2025 09:24

டாஸ்மாக் வளருகிறது என்பது உண்மை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை