உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா முதல்வராக மோகன் மஜி தேர்வு

ஒடிசா முதல்வராக மோகன் மஜி தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வரம்: ஒடிசா முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த மோகன் சரண் மஜி (54) தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.லோக்சபா தேர்தலுடன் இம்மாநில சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களில் பா.ஜ., வென்று பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iwfc5nsc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதிய முதல்வரை தேர்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பூபேந்திர யாதவ் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ. சட்டசபை கட்சி தலைவராக மோகன் சரண் மஜியை தேர்வு செய்தனர். இதனையடுத்து, மோகன் மஜி, முதல்வராக நாளை (ஜூன் 12) பதவியேற்க உள்ளார். இவர், ஒடிசா சட்டசபைக்கு நான்கு முறை தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

துணை முதல்வர்

பா.ஜ.,வைச் சேர்ந்த பார்வதி பரிதா, துணை முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kulandai kannan
ஜூன் 11, 2024 23:15

பாண்டியன் வரவில்லையே என்று இங்கு சிலர் அழுவார்கள்.


Anbuselvan
ஜூன் 11, 2024 20:11

இப்போ பிஜேபி லே மோகன் என்கிற பெயருள்ள தலைவர்களுக்கு முதலமைச்சர் யோகம் போல உள்ளதே


SARAVANAN A
ஜூன் 11, 2024 19:30

நல்வாழ்த்துக்கள் முதல்வராக பதவியேற்க உள்ள மோகன் மஜி அவர்களுக்கும் துணை முதல்வராகவிருக்கும் பார்வதி பரிதா அவர்களுக்கும் மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியும், ஊழலற்ற தூய நிர்வாகத்தை வழங்கியும் நல்லாட்சி நடத்திட வாழ்துக்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை