உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுக்கு பணம்: மஹாராஷ்டிராவில் ரூ. 5 கோடியுடன் சிக்கிய பா.ஜ., பிரமுகர்

ஓட்டுக்கு பணம்: மஹாராஷ்டிராவில் ரூ. 5 கோடியுடன் சிக்கிய பா.ஜ., பிரமுகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக சொகுசு ஹோட்டலில் ரூ. 5 கோடி பணத்துடன் பா.ஜ., பிரமுகர் சிக்கிய சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது.இம்மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு நாளை (நவ.20) ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. பா.ஜ., ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தலைமையில் மஹாயுதி கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பிரிவு, தேசியவாத காங்., சரத்சந்திர பவார் பிரிவு அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி களத்தில் உள்ளது.நேற்று (1811.2024) பிரசாரம் ஒய்ந்த நிலையில், பல்ஹார் மாவட்டம் விரார் என்ற இடத்தில் இன்று (19.11.2024) பகுஜன் விகாஸ் அகாடி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., தன் ஆதரவாளர்களுடன் சொகுசு ஹோட்டலுக்குள் அதிரடியாக புகுந்தார். அப்போது ஹோட்டல் அறையில் பா.ஜ., முன்னாள் அமைச்சர் வினோத் தவாடே, மற்றும் பா.ஜ, எம்.எல்.ஏ., ராஜன் நாயக் ஆகியோர் கட்டுக்கட்டாக பணத்துடன் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து வீடியோ எடுக்கும் செய்தியாளர்களிடம் காண்பித்தனர்.பணத்துடன் கையும் களவுமாக வினோத் தவாடே சிக்கியதால், அவர்களிடம் வாக்குவாதம் செய்து சமாளித்தார். தகவலறிந்த போலீசார் பகுஜன் விகாஸ் அகாடி கட்சி தொண்டர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதன் வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் காங். பதிவேயற்றியது. வினோத் தவாடேயிடமிருந்து மொத்தம் ரூ. 5 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

J.Isaac
நவ 20, 2024 09:43

இந்த செய்தியை வெளியிட்டது ஆச்சரியம்.அதைவிட ஆச்சரியம், ஆரூர் கருத்து எழுதாதது


hari
நவ 20, 2024 11:55

isaac இது எல்லாம் ஜுஜுபி இங்கே திராவிட ஆட்சியில்


Ray
நவ 20, 2024 08:52

குற்றவாளியின் போட்டோ போட்டிருக்கே


Ray
நவ 20, 2024 08:50

ஊழலேயில்லாத ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும் பிஜேபிக்கே இந்த இழிநிலையாப்பா ரூ 200 கோட்டர்னு ஊளையிடுவோரின் பதில் என்ன


Mettai* Tamil
நவ 20, 2024 11:34

தமிழ் நாட்டில் ரூ 200 கோட்டர்னு சொல்லத்தான் செய்வார்கள் ....அந்த ஊரில் நடப்பதை அங்கு உள்ளவர்கள் பார்த்து கொள்ளட்டும் ....


Ray
நவ 20, 2024 20:06

ஊழல் குற்றச்சாட்டில் ஜெயிலுக்கு போயி வந்தவரை முதல்வராக்கிய மட்டைகள்தானே பெரியவா செஞ்சா பெருமாளே செஞ்ச மாதிரி என்பார்கள் சூத்ரன் செஞ்சா துள்ளிக் குதிப்பாங்க


sattiya moorthy
நவ 20, 2024 07:51

kasu koduthal .....


அப்பாவி
நவ 20, 2024 01:23

ஆளுக்கு ஆயிரம் குடுத்தாலும் அன்ஹ்சு கோடியை வெச்சு ரெண்டு லட்சத்து 50000 பேருக்ஜு குடுக்கலாமே. விடியல் மாதிரி பா.ஜ பெரு வெற்றி பெறும். ஆட்சிய்சிப் புடிச்சு மக்களுக்கு ஆப்படிக்க சாரி சேவை செய்தப்போறாங்க. நம்புங்க.


K.Ramakrishnan
நவ 19, 2024 22:59

இங்கேயும் ஒரு பா.ஜ. எம்.எல்.ஏ. நான்கு கோடிவிவகாரத்தில் சிக்கி உள்ளார். இப்ப மராட்டியத்திலா? இவர்கள் பணம் கொடுத்தே ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்தது இப்போதும் அம்பலமாகி விட்டதே...


vadivelu
நவ 20, 2024 07:20

பிட் காயின் இல்லை, அது 150 கோடிகள் எதிர் கட்சிகள் உலாவ விட்டுருக்கு, பணம் என்றால்தான் கண்ணில் பட்டது.


theruvasagan
நவ 19, 2024 22:03

மிகவும் கேவலமாக உள்ளது. ஆனால் பொழைக்கத் தெரியாத ஆளா இருக்காரு. நம்ம ஊருக்கு வந்து.டிரெயினிங் எடுத்திருக்கணும்.


sridhar
நவ 19, 2024 21:46

இது போன்ற கேவலமான ஜனநாயகத்தை விட அந்த கால மன்னராட்சி எவ்வளவோ தேவலாம். வாக்குகளை விற்பனை செய்யும் மக்கள் இந்தியாவின் சாபக்கேடு .


வைகுண்டேஸ்வரன்
நவ 19, 2024 21:44

இந்த பாதகச் செயலையும் திமுக வுடன் இணைத்து எழுதிக் கொள்கிறார்கள். பாஜக செய்கிற எல்லா அக்கிரம செயல்களுக்கும் அதன் தலைவர்கள் பதிலோ விளக்கமோ சொல்லவே மாட்டார்கள். சொல்லவும் வேண்டாம்.பாஜக வின் கொத்தடிமைகள் திராவிட, விடியல், டாஸ்மாக் என்று ஏதாவது சொல்லி அவர்களே பாராட்டிக் கொள்வார்கள்வட இந்திய பாஜக வினர்.இவங்களை அடிச்சாலும், வாங்கிண்டு, திமுக தான் முன்னோடி என்பார்கள்.


Mettai* Tamil
நவ 20, 2024 11:18

இந்த பாதகச் செயலை தான் திருமங்கலம் பார்முலா, மதுரை பார்முலா என்று இந்தியாவிலே முதலில் ஆரம்பித்து வைத்தது தி மு க தானே . 60 வருசமா ,ஊழல் செய்வதை விஞ்ஞான முறையில் செய்து மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பது எப்படி என்று ஊழல் மேலாண்மை படிப்பை சொல்லி கொடுத்ததும் தி மு க தானே ...காமராஜரின் நல்ல எண்ணங்களை விட ,கருணாநிதியின் கெட்ட எண்ணங்களே வேகமாக பரவி விட்டது ...60 வருஷ களையை அழிப்பது கொஞ்சம் தாமதமாகத்தான் செய்யும் .....


hari
நவ 20, 2024 11:56

பாவம் எவளோ நாள் கோமாவுல இருந்தாரோ


hari
நவ 20, 2024 11:58

திமுகவை பற்றி உண்மை அப்படியே சொல்றாரு..... சிறப்பு


தாமரை மலர்கிறது
நவ 19, 2024 21:35

பணம் கொடுக்காமல், இந்தியாவில் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாத சூழ்நிலையை திராவிட கட்சிகள் ஏற்படுத்தி விட்டது.


சமீபத்திய செய்தி