வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காங்கிரஸ், திமுக என்றாலே மோசடிப்பேர்வழிகள்தான்.
காங்கிரஸ் ரத்தம் இவர்களிடத்தில் ஊறியுள்ளது , இந்த கேசெல்லாம் நிற்குமா ?
பெங்களூரு: பண மோசடி தொடர்புடைய விசாரணைக்காக,கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் தம்பியும் காங்கிரஸ் தலைவருமான டி.கே. சுரேஷிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பு உள்ளது.ஐஸ்வர்யா கவுடா என்ற பெண், முன்னாள் காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷின் சகோதரி என்று பொய்யாகக் கூறிக்கொண்டு பலரை ஏமாற்றியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பாக அமலாக்கத்துறை ஐஸ்வர்யா கவுடா 33 , கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தது, அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஐஸ்வர்யா மீதான பணமோசடி விசாரணை தொடர்புடையதாக கூறப்படும் மோசடி வழக்கின் விசாரணைக்காக டி.கே. சுரேஷிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:பலரை ஏமாற்றியதாகவும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி., டி.கே. சுரேஷின் சகோதரி என்று பொய்யாகக் கூறிக்கொண்டதாகவும் ஐஸ்வர்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐ.பி.சி. மற்றும் பி.என்.எஸ். பிரிவுகளால் பதிவு செய்யப்பட்ட பல எப்ஐஆர்களின் அடிப்படையில் ஐஸ்வர்யா கவுடா மற்றும் அவரது கணவர் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது. அந்த அடிப்படையில் பண மோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் எம்.பி. சுரேஷ், ஜூன் 19 ஆம் தேதி வாக்குமூலம் அளித்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறியது.
காங்கிரஸ், திமுக என்றாலே மோசடிப்பேர்வழிகள்தான்.
காங்கிரஸ் ரத்தம் இவர்களிடத்தில் ஊறியுள்ளது , இந்த கேசெல்லாம் நிற்குமா ?