உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குரங்குகள் மோதல்: ரயில் சேவை பாதிப்பு

குரங்குகள் மோதல்: ரயில் சேவை பாதிப்பு

சமஸ்திபூர் : பீஹாரின் சமஸ்திபூரில் ரயில் நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள நடைமேடை எண் 4ல், ஒரு வாழைப் பழத்திற்காக இரண்டு குரங்குகள் மோதிக் கொண்டன. ரயிலுக்காக காத்திருந்த பயணியரில் ஒருவர், அந்த குரங்குகளை நோக்கி தன் கையில் கிடைத்த பொருளை வீசி எறிந்தார். அது, ரயில் தண்டவாளத்தின் மேல் செல்லும் உயரழுத்த மின் கம்பி மீது உரசியது. இதனால், ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், மின் கம்பியில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர். அதன்பின், ரயில் சேவை சீரானதாக கிழக்கு மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ